திருகோணமலை உப்புவெளி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காயமடைந்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரும் கல்லடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டுப் பிரஜைகள் கப்பல் மூலம் இங்குவந்து உப்புவெளி ஹோட்டலில் உணவு உண்ட வேளையிலேயே குறித்த கைகலப்பு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் ஒருவரை உப்புவெளி பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment