பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை மாகாணசபைத் தேர்தலில் கடமையில் ஈடுபடுத்த வேண்டும்: பெபரல்
பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென பெபரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இந்தத் தேர்தலின் பொது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டுமன்றி பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment