தமிழக மக்களின் மனநிலையை அறிந்தே இந்திய மத்திய அரசு செயல்படுகிறது: ஜி.கே.வாசன்
இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
அதன் வெளிப்பாடுதான் முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையான பாதுகாப்பு, உரிமை நலன், அதிகாரத்தில் சமபங்கு உள்ளிட்ட அனைத்து சாரம்சங்களையும் உள்ளடக்கியது தான் ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தம்.
அந்த சாரம்சத்தில் எந்த குறையும் வராதபடி நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment