July 20, 2013

யானை தாக்கி இளம் வன விலங்கு அதிகாரி பலி


லுனுகம்வெஹெர சரணாலயத்தில் பணிபுரிந்து வந்த வன விலங்கு அதிகாரியொருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் காலி ஜிந்தொட்டயைச் சேர்ந்த தினேஷ் அமில ஜயவர்தன என்ற 24 வயதான இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியில் புகுந்த யானையொன்றை விரட்டும் பொருட்டு அங்கு சென்றபோது அவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment