July 02, 2013

“என் தலைவர் பிரபாகரன்” கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

இன்று வவுனியாவில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பத்மநாபா ஞாபகார்த்த நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறைந்திருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உரையில்,

தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற நாமத்தோடு நாங்கள் அனைவரும் இன்று ஒற்றுமைப்பட்டு ஒரு குடையின் கீழ் நிற்பதற்கு அன்று எங்களை ஐக்கியம் எனும் தளத்தில் ஓரணியில் நிறுத்தியது ‘என் தலைவன் பிரபாகரன்’ தான் எனக் கூறிய போது, அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் கரகோசம் எழுப்பி தலைவர் மீதான தங்கள் பற்றுறுதியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் போரின் போது தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளுக்கு வங்கிக்கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு புத்தகங்கள் கையளிக்கப்பட்டதுடன், போரால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு நிதியும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment