இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜாவாத் தீவு கடற்பரப்பிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் போது 200 பேர் வரை படகில் இருந்ததாகவும் அதில் 157 பேர் வரை காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகில் இருந்தோர் இலங்கை, ஈராக், ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான படகில் இருந்த சிலர் நீந்தி கரையை வந்து சேர்ந்து வழங்கிய தகவல்களையடுத்தே மீட்பு பணிகள் தொடங்கப்பட்டதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இவ் விபத்து தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 38 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த படகொன்று கிறிஸ்மஸ் தீவுக்கருகில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment