புத்தக திருவிழா நடத்த போவதில்லை என்று தென்னிந்திய புத்தக
பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம்
(பபாசி) பதிப்பாளர்களுக்கு கடிதம்
அனுப்பியுள்ளது. ஏற்கெனவே தமிழ்க்
கலை இலக்கியப்பேரவை சார்பில் தென்னிந்திய
புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி)
யாழ்ப்பாணத்திற்கு புத்தகக் கண்காட்சி நடத்தச் செல்லக்கூடாது என்று வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டது. அறிக்கையை வரவேற்று தமிழின உணர்வாளர்கள்
இணையதளங்களில் கடிதங்கள், கருத்துகள் எழுதினார்கள். இந்நிலையில் பபாசி “புத்தகக்
கண்காட்சி நடத்துவதை ரத்து’’
செய்ததை தமிழ்க் கலை இலக்கியப்
பேரவை வரவேற்கிறது. பாராட்டுகிறது.
இவ்வாறு தமிழ்க் கலை இலக்கியப்
பேரவை கூறியுள்ளது.

No comments:
Post a Comment