July 21, 2013

சவூதியில் அவதியுறும் இலங்கையர்கள்


சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் அதிகளவு துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது சவூதி அரேபியாவில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் இவர்கள் இருப்பிடங்கள் இல்லாமலும் உணவுகளும் கிடைக்காமலும் பெரும் துன்பங்களை எதிர் நோக்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் உள்ள இஸ்லாமியர்கள் புனித ரமழான் நோன்பு நோற்பதால் அதிக வெப்பத்தில் மிகவும் பல இன்னல்களை எதிர் நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர். எனவே இலங்கை தூதரக அதிகாரிகள் துரிதமாக செயற்பட்டு தமது சொந்த நாடுக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment