மட்டக்களப்பு மண்முனை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேரை கடத்திச் சென்றுக்கொண்டிருந்த குழுவொன்றை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வெள்ளை வேனில் சென்ற ஆறு பேர் கொண்ட இந்த குழுவினர் மேற்படி குடும்பத்தை சேர்ந்த
வேனில் ஏற்றிச் சென்றுள்ளனர். இவர்கள் தம்மை இராணுவத்தினர் என
அடையாளப்படுத்தி கொண்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிசூரிய தெரிவித்துள்ளார். பிரதேச மக்கள் இராணுவத்தினருக்கு வழங்கிய தகவல்களை அடுத்து, சந்தேக நபர்கள்
காத்தான்குடி காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகளை இவ்வாறு கடத்திச் செல்ல
முயற்சித்துள்ளனர். தனிப்பட்ட பிரச்சினையே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment