இவரது தோட்டத்தில், பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில், துப்பாக்கி குண்டுகள் கிடந்ததை, நரேந்திரன் என்பவர் பார்த்துள்ளார். இதுகுறித்து, அவர், சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், பாழடைந்த கிணற்றில் தோண்டி பார்த்தபோது, அதில், அதிநவீன ரக இயந்திர துப்பாக்கி ஒன்றும், 40 தோட்டாக்கள், 17 காலி டெட்டனேட்டர்கள் கிடைத்தன.
இதைக் கைப்பற்றிய போலீசார், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கார்பன் வகை துப்பாக்கி, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கு இருக்கும் போலீசாருக்கும், உயர்மட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கும் வழங்கப்படுவது. கிணற்றில் துப்பாக்கி இருந்தது குறித்து, சமயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:
Post a Comment