▼
June 18, 2013
ஜேர்மனியிலும புலிகள் படை ஸ்ரீலங்கா அரசு
விடுதலைப் புலிகளின் அமைப்பு பல சமூகநல நிறுவனங்கள் என்ற பெயரில் ஜேர்மனியில் இன்னமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்ட அவர் ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கைடோ வெஸ்டர் வெல்லுடன் நடத்திய பேச்சுக்களின் போதே இந்தத் தகவலை அவரிடம் கூறியுள்ளார். பிரசாரத்துக்காகவும் நிதி திரட்டலுக்காகவும்விடுதலைப் புலிகளின் நிறுவனங்களால் ஏராளமான பாடசாலைகள் ஜேர்மனியில் செயற்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது எனவும் பீரிஸ் இந்தச் சந்திப்பின் போது கூறியுள்ளார். "ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளுக்குத் தடை விதித்துள்ள நிலையில் அதனை மீறும் வகையில் ஜேர்மனியில் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இது குறித்து ஜேர்மன் அதிகõ ரிகள் உன்னிப்பான கவனத்தை செலுத்த வேண்டும்'' எனவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் பீரிஸ் கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment