May 15, 2013

களப்பணியில் இருக்கும் மாணவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கடந்த 10 நாட்களாக கோயம்பேடு செங்கொடி அரங்கத்திலிருந்து செயல்பட்டுகொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இன்று அதிகாலை முதல் சென்னை சுற்றியுள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு துண்டுபிரச்சூரம் கொடுக்க சில மாணவர்கள் இரவே வந்து தங்கியிருந்தனர்.

அதிகாலை விழித்து பார்த்ததில் அங்கிருந்தவர்களின் அனைத்து செல்போனும் காணாமல் போயிருந்தது. 30,000 மதிப்புள்ள 7 செல்போன், லேப்டாப்பில் மாட்டியிருந்த ஒரு யு.எஸ்.பி, மோடம், ஒரு வை.பை. ரௌட்டர் என அனைத்து தொலைதொடர்பு சாதனங்கள் திருடுபோயிருந்தது. ஆனால் அதை சுற்றியிருந்த 4 லேப்டாப், ஆணியில் மாட்டியிருந்த சட்டை பேன்ட்டில் வைக்கப்பட்டிருந்த 1200 ரூபாய் பணம் என அனைத்தும் பத்திரமாக உள்ளது.

பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை விட்டுவிட்டு ஒட்டுமொத்த தொலைதொடர்பு சாதனைகளை திருடிக்கொண்டு சென்றவரின் நோக்கம் என்னவென்று புரியவில்லை.

உண்ணாவிரதம் இருந்ததிலிருந்து செங்கொடி அரங்கத்திலிருந்து நாம் செயல்பட அரசின் கெடுபிடி அதிகமிருக்கிறது. காவல்துறையிடம் திருட்டைப்பற்றி முறையிட்டால் இதை வைத்துகொண்டு விசாரணை என்ற பெயரில் நாம் அந்த இடத்தில் இருந்து செயல்பட முடியாதபடி நெருக்கடி அதிகரிக்கும் என்பதால் புகார் கொடுக்கலாமா வேண்டாமா என சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சென்னை மாவட்ட மாணவர்களை தொடர்புகொள்ள 97908 47172, 99628 91945 என்ற எண்களை அழைக்கவும்.

No comments:

Post a Comment