May 12, 2013

வாகன விபத்தில் ஊடகவியலாளர் பலி

கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவில் கடற்கரை பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்திலேயே கந்தான பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளரான 27 வயதுடைய அனுஸ்க இந்திரஜித்
பெனாண்டோ என்வபர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த அனுஸ்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார். இவர் ரண் எப்.எம். இன் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக
கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்தை அடுத்து முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment