தீர்மானம் நிறைவேற்றும் தமிழகம் கருத்தில் எடுக்கா மத்திய அரசு. தமிழகத்தின் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் பல ஏக மனதாக நிறைவேற்று பட்டு வருகின்றன ஆனால் மத்திய அரசோ எந்தவொரு தீர்மானத்துக்கும் தலை சாய்க்கவில்லை இந்த போக்கு தமிழர்கள் மத்தியில் ஒரு விரக்தியை தோற்றுவித்துள்ளது. மத்திய அரசு தமிழக மக்களை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது
தமிழர்களின் அடுத்த நடவடிக்கை என்ன நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் கணக்கில் எடுக்கா மதிய அரசை கண்டித்து ஒரு தீர்மானம் போடலாமே அதையும் அவர்கள் கணக்கேடுப்பர்களோ தெரியவில்லை அடுத்து அடுத்து என்ன? பெரிய கேள்வி இதுதான்
செய்தி
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக
நடத்தும் தாக்குதல்களை தடுப்பதற்காக கச்சத்தீவை மீட்பது தான்
ஒரே வழி என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக மீனவர்கள் முகம் கொடுக்கும்
இன்னல்களுக்கு தீர்வு காணவேண்டுமாயின்
கச்சத்தீவை மீட்பது மட்டுமே வழி என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள்
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும்
இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும்
தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். 1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி,
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழக
மீனவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த
அத்துமீறல்களை தடுக்க வேண்டுமானால், கச்சத்தீவை மீட்டு இந்திய ஆளுகையின் கீழ்
கொண்டுவர வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment