டொர்னேடோ சுழற்காற்று வீசியதில் டஜன்
கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல குடியிருப்புப் பகுதிகள் மொத்தமாகவே தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 51 என்றாலும், அதற்கும் மேற்பட்டு 40 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்படுள்ளதாக மாநில மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. இந்த டொர்னேடோவில் சிக்கி அழிந்த ஆரம்பப் பள்ளிக்கூடம்
ஒன்றின் பிள்ளைகள் இருபது பேரும் இறந்தவர்களில் அடங்குவர். மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக்
குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்கள் சகிதம் மீட்புப் பணியாளர்கள் இரவு முழுக்க
தேடுதல் பணி ஆற்றிவருகின்றனர், இது ஒரு பேரழிவு இயற்கைச் சீற்றம் என்று பிரகடனம் செய்துள்ள அதிபர் ஒபாமா, மத்திய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். இந்த டொர்னேடோ மணிக்கு 320 கிலோமீட்டர் என்ற வேகத்தில்
வீசியுள்ளது.

No comments:
Post a Comment