கூடங்குளத்தில் பொது அமைதிக்கு எதிராக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கிலும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அவர் மீதான அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்திருக்கிறது. இதனால் ராமதாஸ் நாளை விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசு கடலூரில் தடையை மீறி போராட்டம் நடத்திய வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது அடுத்தடுத்து பல வழக்குகள் போடப்பட்டன. ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால் அதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்தது. இதேபோல் அடுத்தடுத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று கூடங்குளத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதற்காக ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கிலும் ஜாமீன் கிடைத்திருக்கிறது. இதுவரை அவர் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துவிட்டது. இதனால் அனேகமாக அவர் திருச்சி சிறையில் இருந்து நாளை விடுதலையாக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment