வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக
நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுங்கேணி இராணுவ முகாமைச் சேர்ந்த
ஒருவரையே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள்
கைது செய்ததோடு சந்தேகநபரை இன்று கால ஆஜர்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தனர். ஆனால் மதியம் வரை சந்தேகநபர் நீதிமன்றத்தில்
ஆஜர்ப்படுத்தபடவில்லை என்று அங்கு சென்ற செய்தியாளர் கூறுகின்றார். இதேவேளை, இராணுவ பொலிஸார் சம்பவம்
இடம்பெற்ற நெடுங்கேணி சேனப்பலவு பகுதிக்கு சென்றிருந்த
அப்பகுதியில் விசாரணைகளிலும்
ஈடுபட்டிருந்தனர். அத்துடன், சந்தேகநபர் பயன்படுத்தியதாக
தெரிவிக்கப்படும் சைக்கிள் ஒன்றும்
கைப்பற்றப்பட்டு வவுனியாவிற்கு கொண்டுவரபட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment