பிரிட்டனில் லீ ரிக்பி(Lee Rigby) என்ற இராணுவ வீரர் ஒருவர் கழுத்து அறுத்து கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை ஒட்டி இறந்த இராணுவ வீரருக்கு அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மாற்றான் தந்தை, முன்னாள் மனைவி ரெபேக்கா(Rebecca), 2 வயது மகன் ஜேக், காதலி எமி மற்றும் அவருடைய நண்பர்கள் பலர் பூங்கொத்தினை அவர் கொலைச் செய்யப்பட்ட இடத்தில் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அவருடைய வருங்கால மனைவியாக நிச்சயிக்கப்பட்ட எமி, இராணுவவீரர் தன் கையால் எழுதிய கொடுத்த பரிசினை பூங்கொத்துடன் வைத்து தனது இரங்கலை தெரிவித்தார்.
அந்த குறிப்பில் அவர், எமியை இரட்சிக்கும் தேவதை, எப்பொழுதும் என் இருதயத்தில் குடியிருக்கும் இளவரசி என்று எழுதியிருக்கிறார். மேலும் இராணுவவீரரின் மகன் கூறுகையில், எனது தந்தை லட்சத்தில் ஒருவர் என்று தெரிவித்துள்ளான்.
மேலும் அங்கு கூடியிருந்த உறவினர்களும் மற்றும் நண்பர்களும் கட்டி தழுவி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
No comments:
Post a Comment