May 02, 2013

மாவீரர் மேஜர் கணேஷின் மனைவி கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வுத்துறையினரால் கைது

பயத்தின் காரணமாக தமிழ்
நாட்டின் திருச்சியில் கடந்த
மூன்று வருடங்களாக தனது இரண்டு பிள்ளைகளுடன் (கோவர்ஜன்
10, நிதுர்சன் 7) தங்கியிருந்த
ஜெயந்தினி 33 இலங்கை கட்டுநாயக்க விமான
நிலையத்தில் கைது செயப்பட்டுள்ளார் நிலைமை சீர்டைந்ததாக கூறப்பட்ட
செய்திகளை நம்பி தனது சொந்த
ஊருக்கு திரும்பிய வேளையில் கடந்த
ஞாயிறுக்கிழமை 28.04.2013
அன்று அதிகாலை தனது இரு பிள்ளைகள்,
உறவினர்கள் இருவர், நண்பர் ஒருவர் ஆகியோரோடு திருச்சி விமான
நிலையத்திலிருந்து கட்டுநாயக்க
விமானநிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில்
வைத்து ஒரு வானை வாடகைக்கு பிடித்துக்க
வந்த நண்பர் ஒருவரின் கொழும்பில் உள்ள
வீட்டை சென்றடைந்த போது ஒரு வானில் வந்த
புலனாய்வுத்துறையினர் இவர்கள்
அனைவரையும் அழைத்துசென்றனர். கடந்த 30.04.2013
செவ்வாக்கிழமை அன்று பிள்ளைகள்
இருவரையும், உறவினர் இருவருடன்
விடுவித்தனர், அத்துடன் நண்பரையும்
விடுவித்துள்ளனர். ஆனால்
ஜெயந்தினி தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு இவர்
மட்டக்களப்பு கோயில்போரதீவை சேர்ந்தவர். இவரின் கணவர் ஒரு மாவீரர் மேஜர் கணேஷ் (35
கிராமம், பாலையடிவட்டை). பிள்ளைகள் உறவினரிடம் ஒப்படைக்கும்
போது பிள்ளைகளை வாரத்தில்
ஒருதடவை தாயை பார்வை இடுவதற்கு அனுமதி
கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment