May 06, 2013

டக்கிளஸ் அமைச்சருக்கு எதிரான துண்டு பிரசுரம்-தாக்குதலில் இருவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக
துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஸ்பராஜா புவிலன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை முதல்
துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். பின்னர் அதை தொடர்ந்து நகரப்பகுதிக்கு செல்ல பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த வேளை அவர்கள் மீது இன்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டர் சைக்கிள்களில் வந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள்
மீது கிரிக்கெட் மட்டைகள் மற்றும்
மண்வெட்டி பிடிகளால் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. படுகாயங்களுக்கு உள்ளன இருவரும் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment