இலங்கையில் நடைபெறவுள்ள
பொதுநலவாய நாடுகளின்
மாநாட்டில் பிரித்தானிய
பிரதமர் டேவிட் கமரூன்
பங்கேற்பார் என பிரித்தானியாவிலுள்ள
இலங்கை உயர்ஸதானிகரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல்கள்
தொடர்பில் பல்வேறு அமைப்புகளும்,
நாடுகளும் குரல் எழுப்பி வருகின்றன. எனவே இலங்கையில் இடம்பெறும்
பொதுநலவாய
மாநாட்டை பிரித்தானியா உட்பட்ட நாடுகள்
புறக்கணிக்கவேண்டும்
என்று கோரிக்கைகளும்
வலுப்பெற்று வருகின்றன. இந்தநிலையில் குறித்த கோரிக்கைகள்
மற்றும் அழுத்தங்களை சவாலாகக்
கொண்டு டேவிட் கெமரோன் இலங்கையில்
இடம்பெறும் மாநாட்டில் பங்குபெறவுள்ளார். பொதுநலவாய நாடுகள்
அமைப்பு ஏற்கனவே எடுத்த
முடிவுக்கு மதிப்பு தந்து அந்த அமைப்பின்
கொள்கைகளை வலுப்படுத்தும்
முகமாகவே இந்த
முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் இடம்பெறும்
மாநாட்டில் பங்கேற்காமல் இருப்பதன் மூலம்
இலங்கையின் மனித உரிமை மீறல்
சம்பவங்களை கட்டுப்படுத்தமுடியாது என
அவர் தெரிவித்துள்ளார். அதற்கு மாறாக இலங்கைக்கான விஜயத்தை அந்த
நாட்டின் மனித உரிமை மற்றும் ஜனநாயக
உரிமைகள் தொடர்பில் உரிய வகையில்
பயன்படுத்திக்கொள்ள டேவிட் கெமரோன்
எண்ணியுள்ளதாக பிரித்தானிய ஊடகம்
ஒன்று குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment