கொள்கையே தமிழீத்தின் நிலைப்பாடு என்பதனை தமிழீழத் தேசியத்
தலைவர் அவர்கள் 2002ம்
ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்த
ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தெளிவாக
எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில் பொருளாதாரக்
கொள்கை வகுப்பினை அடிப்படையாக
கொண்ட சோசலீசம் என்பது தமிழீழ
தேசத்தின் நிலைப்பாடாக
இருக்கவில்லை என்பதனை
இதன்வழி அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும். பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்
பங்கெடுத்திருந்த வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த 2002ம் ஆண்டு ஊடகமாநாட்டில்
வெளிநாட்டு ஊடகர் ஒருவர் தமிழீழத்தின்
பொருளாதார கொள்கை நிலைப்பாடு என்ன
என்பது பற்றி கேள்வி எழுப்பிய போது ஒற்றைவரியில கூறினால் திறந்த
பொருளாதாரக் கொள்கையே தமிழீத்தின்
நிலைப்பாடு என தமிழீழத் தேசியர் அவர்கள்
கூற அதனை மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம்
அவர்கள் எடுத்துரைத்திருந்தார். " LTTE’s economic philosophy, Mr.
Pirapaharan said an “open market
economy.” But he pointed out that: “We
can only think about a proper economic
structure when the ethnic problem is
resolved. … What form and what structure this economic system is to be instituted in
can only be worked when we have a
permanent settlement or independent
state.” உருவாகிவரும் தமிழீழ சுதந்திர சாசனம்
குறித்து ஓருசிலரால்
மேற்கொள்ளப்பட்டுவரும் விசமத்தனமான
பிரச்சாரம் குறித்து நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சகத்தினால்
வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பொன்றிலேயே இவ்விடயம்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்
வரலாறு தெரியாத நிலையிலேயே இவ்வாறான
விசமத்தனமான பிரச்சாரங்கள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினை அவதா
கூடியதாக இருக்கின்றதென்றும்- இது தமிழீழ
விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாக மட்டுமல்ல
தமிழீழத்தினை வென்றடைவதற்கான தமிழர்களின்
விடுதலைப்பாதைக்கு எதிரான சதியாகவும்
இதனை கருதவேண்டியுள்ளதெனவும் ஊடக
அமைச்சின் செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : 1986ம் ஆண்டுப்பகுதியில் மதியுரைஞர்
அன்ரன் பாலசிங்கம் அவர்களினால்
எழுதப்பட்டிருந்த சோசலீச தமிழீழம் என்ற
நூலானது தமிழீழ விடுதலைப்புலிகளின்
அரசியல் கொள்கை வரைவாக
இருந்ததே அன்றி அது தமிழீழ சுதந்திர சாசனமாக விடுதலைப் போராட்டத்தின்
எந்தவொரு காலகட்டத்திலும் தமிழர்
தரப்பினால் முரசறையப்படவில்லை. சமாதான காலத்தில் தமிழீழத்தில் மக்களின்
பேரெழுச்சி நிகழ்வாக அமைந்திருந்த
பொங்குதமிழ் நிகழ்வில் கூட
இது முரசறையப்படவில்லை. பொருளாதார - வர்த்தக நலன்சார்ந்த சர்வதேச
உலக ஓட்டத்தில்
தமிழீத்தினை வென்றடைவதற்கான மூலோபாய
நிகழ்ச்சி நிரலாக சோசலீசம்
என்பது அமையாது என்ற நிலையிலேயே, திறந்த
பொருளாதாரக் கொள்கையே தமிழீத்தின் நிலைப்பாடு என்பதனை 2002ம்
ஆண்டு ஊடகவியலார் மாநாட்டில் தமிழீழத்
தேசியத் தலைவர் அவர்கள் தெளிவாக
ஒற்றைவரியில் எடுத்துரைத்துள்ளனர். இந்த வரலாற்று உண்மையினை உணர்ந்து,
தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு எதிரான
விசமத்தனமான பிரச்சாரங்கள்
குறித்து அனைவரையும் விழிப்பாக இருக்க
வேண்டுவதோடு, தமிழீழ சுதந்திர சாசன
உருவாக்கத்தில் அனைவரையும் பங்கெடுத்து, தமிழீழத்தினை வென்றடைவதற்கான
விடுதலைப்பாதைக்கு வலுவூட்டுமாறு நாடுக
தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சின்
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment