தனது பங்காளிக் கட்சிகளை வைத்து இதனை இரத்துச் செய்ய திட்டம் தீட்டியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு தேர்தலைக் கண்டு அரசாங்கம் பயந்து விட்ட நிலையில் அதில் போட்டியிட்டு தான்
வெல்ல முடியாதென புரிந்துள்ளது. அதற்காகவே இவ்வளவு காலமும் அதனை பிற்போட்டு வந்தது. இருப்பினும் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் எதிர்வரும் செப்டெம்பரில்
வட மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுமென அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதனை இரத்துச் செய்வதற்காக தனது பங்காளிக் கட்சிகளை வைத்து நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்யவுள்ளது. இதனை ஏற்கனவே பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து சர்வதேச சமூகத்திற்கு நீதிமன்றம் வடக்கு தேர்தலை நிறுத்தியுள்ளதென அரசாங்கம்
கைவிரிக்கப் போகின்றது. அதேவேளை சர்வதேசமும் அரசின் நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment