கிளிநொச்சி தொண்டமான்நகரில்
அமைந்துள்ள உதிரவேங்கை வைரவர் ஆலயத்தின்
கதவு உடைக்கப்பட்டு ஐம்பொன்னால் ஆன
முருகன் விக்கிரகம், கருங்கல்
விக்கிரகங்களுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த
ஐம்பொன்தகடுகள் மற்றும் ஆலய ஒலிபெருக்கி சாதனம், ஆலய உபகரணங்கள்
நேற்றிரவு கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. இன்று காலை ஆலயத்தை வழிபடச் சென்றவர்கள்
ஆலயம்
உடைக்கப்பட்டு இருந்ததை அவதானித்து பரிபா
பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே வேளை ஆலயக் காணியைக் கரைச்சிப்
பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன்
பெரும்பான்மை இனத்தவர்
ஒருவருக்கு வழங்கியுள்ளார். இதற்கு இப்பிரதேச மக்கள் எதிர்ப்புக்களைத்
தெரிவித்து பல்வேறு தரப்பினரிடமும்
முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் குறித்த காணியை அபகரிக்கும்
நோக்குடனேயே இவ்வாலயத்தின் மீதான
கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக
அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment