அருகிவரும் உயிரினங்களின் இறைச்சியை வைத்திருந்த சீனப் பிரஜை கைது
ஹம்பாந்தோட்டை, மிரிச்சவில பிரதேசத்தில் அருகிவரும் உயிரினங்களின் இறைச்சியை வைத்திருந்த சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சீனப் பிரஜைக்கு சொந்தமான உணவகத்தில் இருந்து ஆமையொன்றும் மற்றும் இலங்கைக்கே உரித்தான சில உயிரினங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை வன இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சீனப் பிரஜைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment