உத்தியோகத்தருக்கு மென்பானத்துடன் மயக்கம் அடையக்கூடிய திரவமொன்றினைக் கலந்து அருந்தக் கொடுத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற சம்பவமொன்று கொழும்பு-பதுளை இரவு தபால் ரயிலில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. பதுளைக்கு வந்த மேற்படி ரயிலில் மயக்கமுற்றிருந்த இ.போ.ச. உத்தியோகத்தர்
பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் பதுளை அரசினர் மருத்துவ மனை பொலிஸாருக்கு அளித்த புகாரில் தன்னிடமிருந்த 22 ஆயிரம்
ரூபா பணம் கைவிரலில் அணிந்திருந்த ஒருபவுண் எடையுள்ள மோதிரம் பெறுமதிமிக்க கையடக்க தொலைபேசி ஆகியனவும் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் ரயிலில் பதுளைக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்த போது என்னருகே இருந்த நபர் என்னுடன் நெருக்கமாக பேசிக் கொண்டு வந்தார். சிறிது நேரத்தில் நாமிருவரும் நண்பர்களானோம். அதையடுத்து அவர் தனக்கு வழங்கிய மென்பானத்தை அருந்தியதும் நான் மயக்கமுற்றேன். அதன்
பிறகு என்ன நடந்ததென்று எனக்கு தெரியாது. மருத்துவமனையில் நினைவு திரும்பியதும் என்னிடமிருந்த பணம் மோதிரம் கையடக்கத் தொலைபேசி காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தேன் என்றும் அவ் உத்தியோகத்தர் பொலிஸாரிடம்
தெரிவித்தார். பதுளைப் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment