May 02, 2013

இராணுவம் பறிகிறது போக அடுத்து போலீஸ் காணியை பறிக்குது

காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் நெல்லியடியில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்குத் தனியார் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஒட்டப்பட்டுள்ளது. இந்தக் காணி, நெல்லியடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் நாவலர் மடச் சந்தியிலிருந்து கிரிப் பல்லி எனும் இடத்துக்குச் செல்லும் பாதையில் உள்ளது. கரவெட்டிப் பிரதேச செயல கத்துக்குட்பட்ட ஜே/351 கரணவாய் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்டது. காணி எடுத்தல் சட்டத்தின் பிரகாரம் யாழ். மாவட்ட காணி அபிவிருத்தி அமைச்சால் 2013.04.22 ஆம் திகதியிடப்பட்டு, யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அதிகாரியால் கையொப் பமிடப்பட்டு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த காணிச் சொந்தக்காரர் புலம் பெயர்ந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment