
தமிழர்களாகிய நாங்கள் எந்த நாடுகளில் வாழ்ந்தாலும் பேதம் பார்க்காமல் எல்லாத் தமிழ் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து தமிழீழத்துக்காகப்போராட வேண்டும். இனி ஒருபோதும் ஈழத் தமிழர், தமிழகத் தமிழர், இந்தியத்தமிழர், கனடாத் தமிழர், அவுஸ்திரேலியாத் தமிழர்,மலேசியாத் தமிழர் என பிரித்துப் பார்க்க வேண்டாம்,நாம் எல்லோரும் ஓர் குடும்பம். எமக்குள் ஆயிரம் பிரச்சனைகள், கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் தமிழர்களை தாக்க, தமிழர்களை அழிக்க, தமிழர்களை ஏமாற்ற யாரும் வருவார்களாக இருந்தால் அந்த கயவர்களுக்கு எதிராக, அந்த எதிரிக்கு எதிராக நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற ஒற்றைக் குடையின் கீழ் ஒன்றுபட்டு போராட வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழலாம் என்றார்.
No comments:
Post a Comment