யாழ்.பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களின் தொழுகைக்காக கடந்த மாதம் புதிதாக திறந்து வைக்கப்பட்ட தொழுகை அறை நேற்று இரவு விசமிகளின் ஓயில்
வீச்சுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாக அனுமதியுடன் கடந்த மாதம் 22 ஆம் திகதி "முஸ்லிம்
மாணவர் மன்றம்" என்ற பெயரில் குறித்த தொழுகை அறை திறக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் தொழுகையினை மேற்கொண்டுவந்தனர். தொழுகை அறை திறக்கப்பட்டு சில நாட்களுக்கிடையே அறையில் தொங்கவிடப்பட்ட "முஸ்லிம் மாணவர் மன்றம்"
என்ற பெயர் பலகை சேதமாக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது.அத்துடன் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில்
திறக்கப்பட்ட தொழுகை அறை தொடர்பாக அவதூறாக செய்திகள் பரப்பப்பட்டு வந்ததாகவும் முஸ்லிம் மாணவர்கள்
தெரிவித்தனர்.

No comments:
Post a Comment