ஒரு லீற்றர் எரிபொருள் மூலம் ஆயிரம் கி.மீ தூரத்தை கடந்து செல்லும் புதிய வாகனத்தை தயாரித்துள்ளனர் துபாய் கல்லூரி மாணவர்கள். துபாய் கல்லூரி மாணவர்கள் தங்களி்ன் இரண்டு ஆண்டு கால உழைப்பின் காரணமாக இந்த சாதனையை செய்துள்ளதாக மாணவர்களில் ஒருவரான அகமது காமிஸ் அல் சுவைதி தெரிவித்துள்ளார்.
25 கிலோ எடையும், அரை மீட்டர் அகலமும், இரண்டு மீட்டர் நீளம் அரை மீட்டர் உயரமும் கொண்ட இந்த காருக்கு ஈகோதுபாய்-1என பெயரிடப்பட்டுள்ளது. 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது கண்காட்சியில் இடம் பிடித்துள்ள இந்த கார் மேலும் மெருகூட்டப்பட்டு வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் திகதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ள ஷெல் சுற்றுச்சூழல் மாரத்தான் போட்டியி்ன் போது இடம்பெறும் கண்காட்சியில் வைக்கப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment