இலங்கையில் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதுடன் கருத்துச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசிடம் கோரியுள்ளது பிரிட்டன். கருத்துச் சுதந்திரம் மற்றும் அண்மைக் காலத்தில் ஊடகவியலாளர் பலர் தாக்கப்பட்டுள்ள சம்பவங்களைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் தொடர்ச்சியாக ஆழ்ந்த கவலைபடைத்துள்ளதாக என்று பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அமைச்சர் அலிஸ்ரயர் பேர்ட் தெரிவித்துள்ளார். 2012 நவம்பரில் ஜெனிவா பருவ கால மீளாய்வின் போது, இலங்கை மக்கள் அனைவரும் தம் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவதை உறுதி செய்யும்மாறும் எதிர் தாக்குதல் நடத்தப்படும் என்ற பயமின்றி தமது கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் சுதந்திரமாக வெளியிட வசதி செய்யப்பட வேண்டும். என்றும் பிரிட்டன் இலங்கைக்கு யோசனை கூறியிருந்தது. அத்துடன் மனித உரிமைகள் சபையின் கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாடு தொடர்பான அறிக்கையாளரை இலங்கைக்கு அழைக்குமாறும் அழைப்பு விடுக்கும்படியும் இலங்கையை பிரிட்டன் கேட்டுக்கொண்டது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இந்தப் பரிந்துரையை இலங்கை அரசு நிராகரித்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எமது தூதராக அதிகாரிகள் கருத்துச் சுதந்திரம் உட்பட மனித உரிமைகள் தொடர்பாகக் காலம் தவறாமல் எடுத்துக்
கூறி வருகிறார்கள். மனித உரிமைகள் சபையில் மார்ச் 21 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை பிரிட்டனும் இணைந்து பிரேரித் திருந்தது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தை நாம் வரவேற்றிருந்தோம். தீர்மானத்தில் காணப்படும் பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் பேர்ட் குறிப்பிட்டார். சர்வதேச மனித உரிமை சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவை தொடர்பான கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும். இதில் ஊடகவியலாளர்களின் பத்திரமான பாதுகாப்பும் அடங்கும் என்று பிரிட்டிஷ் அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment