▼
April 24, 2013
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் யார் ஏன் மகிந்தவுக்கு தலையிடி
வடமாகாணசபைத் தேர்தல் குறித்தும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் போட்டியிடலாம் என்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றாரா? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கனவானகிய நீதியரசர் விக்னேஸ்வரன் அரசியலுக்கு வருவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை என கூறியிருக்கின்றார். அதனை எப்படி உறுதியாக கூறமுடியும். நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டாலரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படலாம் என்ற தோரணையில் ஜனாதிபதி இங்கு கருத்து தெரிவித்தாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment