உதயன் பிரதான அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அச்சு இயந்திரப் பகுதியும் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பிரதான அலுவலகத்தில் வழமை போல் இன்றும் பத்திரிகை விநியோகப் பணிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்த வேளை அதிகாலை 4.45மணியளவில் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பணியாளர்களையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி அச்சுக் கூடப்பகுதிக்குள் நுழைந்தவர்கள் அச்சு இயந்திரங்களையும் பெற்றோர் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். அத்துடன் உதயன் வளாகத்திற்குள்ளும் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.பத்திரிக்கை மற்றும் சுயாதீன செய்தி சேவைக்கும் பெரும் அச்சுறுத்தலாக இன்னும் இலங்கை இருப்பதயே ஊடக துறை மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் வெளிப்படுத்துகின்றன .




No comments:
Post a Comment