சர்வதேச மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் சுமார் 250 மாணவ மாணவிகள் திரண்டு பாரியா ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஆர்பாட்டம் நியூயோர்க்கில் நடைபெற்றவேளை இதில் கலந்துகொண்ட வெள்ளை இன மக்கள் யுகண்டா, சீனா, சூடான் போன்ற நாடுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். அதுமட்டுமல்லாது அவர்கள் இலங்கைக்கு எதிரான பதாதைகளையும் தாங்கி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை, உலக நாடுகள் இணைந்து விசாரிக்கவேண்டும் என்று அவ்வேளையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ளை இனத்தவர்களுடன் அமெரிக்க தமிழ் மாணவர்களும் இளையோர்களும் இணைந்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். வெள்ளை இனத்தவர்கள் நடத்திய இப் போராட்டமானது பாரிய அளவில் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம்.


No comments:
Post a Comment