இந்த சம்பவம் இடம்பெற்று ஜந்து நாட்கள் என குறித்த தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் 05ம் இலக்க தேயிலை மலையில் குறித்த தோட்ட தொழிலளர்கள் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளை ஒளி ஒன்று தோன்றியதை கண்ட மக்கள் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது தேயிலை மரத்தின் அடிப்பகுதியில் பிள்ளையார் உருவம் காட்சி அளித்ததாக சலங்கந்த தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தோன்றிய பிள்ளையாருக்கு தோட்ட மக்கள் பால் குடம் எடுத்து பூஜைகள் செய்துவந்தனர்.
சலங்கந்த தோட்டத்தில் தோன்றிய பிள்ளையாரை வெளி தோட்டங்களைச் சேர்ந்த மக்களும் வந்து வழிபட்டு செல்வதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

No comments:
Post a Comment