April 20, 2013

இலங்கை போலீஸ் சித்திரவதையின் கூடாரம் அமெரிக்கா


இலங்கை பொலிஸ் நிலையங்களில் சித்திரவதைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
2012ம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதிகள் மீது பொலிஸார் பல்வேறு வழிகளில் துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகார துஸ்பிரயோகம் இடம்பெறுகின்றது.

பொலிஸாரும் படையினரும் சித்திரவதைகளில் ஈடுபட்டமைக்கான நம்பகமான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி கைதிகள் மற்றும் பொதுமக்கள் மீது துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொல்பித்திகம பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு கைதியை தாக்கியமைக்காக இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு சம்பவங்களை வரிசைப்படுத்த முடியும்.

வடக்கு, கிழக்கில் புலனாய்வுப் பிரிவினர், படையினர், பொலிஸார் போன்றோர் தொடர்ச்சியாக முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதனால் அவர்களினால் இயல்பு வாழ்க்கையைத் தொடர்பில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் பெண்கள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன.

அச்சம் காரணமாக இந்தச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்படுவதில்லை என அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment