April 21, 2013

முள்ளியவளையில் மக்கள் வீடுகள் ஆதிக்க படையால் தீக்கிரை

முள்ளிவளையில் மக்களுடைய வீடுகள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முள்ளியவளையில் உள்ள மக்களுடைய வீடுகளை நேற்று இரவு ஒரு மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று தீக்கிரையாக்கி விட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் 4 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன. எனினும் குறித்த வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்றிருந்தமையினால் அவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி தப்பிக் கொண்டனர். சம்பவத்தையடுத்து இன்று காலை அமைச்சர் றிசாட் பதியூதினிடம் நேரடியாக சென்று சம்பவம் குறித்து கூறிய போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தற்காலிக வீடுகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ரிசாட்டின் ஏற்பாட்டில் முள்ளியவளை பகுதியில் உள்ள 540ஏக்கர் தேக்கம் காட்டை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில வாரங்களாக பிரதேச மக்கள் அமைச்சர் றிசாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதுடன் மக்கள் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இச்சம்பவங்களை அடுத்தே மக்களுடைய வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...

No comments:

Post a Comment