November 05, 2012

துப்பாக்கி என்ன கதை?

துப்பாக்கி! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் ‘துப்பாக்கி’. துப்பாக்கி படத்தின் டிரெய்லரும், பாடல்களும் துப்பாக்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்துவிட்ட நிலையில் சமீபத்தில் துப்பாக்கி படத்தின் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் “ தெலுங்கு ரசிகர்கள் துப்பாக்கி படத்தை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் ‘சினேகிதடு’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியான போதும் எனக்கு இதே எண்ணம் வந்தது. தெலுங்கில் தொடர்ந்து ஹிட்டுகள் கொடுத்து வந்த ஷங்கர் சார் நண்பன் படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்தார்.

No comments:

Post a Comment