சர்வதேச கைதிகள் தினமான இன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் காணாமல் போனவர்களை பாதுகாப்பாக மீட்டுத்தர வேண்டியும் வவுனியா, குருமன்காட்டிலுள்ள காளி கோவிலில் 1008 தேங்காய் உடைத்து சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10.15 மணியளவில் வவுனியா குரமன்காடு காளி கோயிலில் ஆரம்பமான இந் நிகழ்வில் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாலுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சுரேஸ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராசா வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களான பிரசன்னா, ஜனார்த்தனன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் புளொட் இயக்க தலைவர் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனியின் உறுப்பினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் காணாமல் போனோரின் உறவினர்களும் கண்ணீருடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment