March 07, 2012

பற்றைக்குள் பெண் சிசு-காரை நகர்

காரை நகர் மொந்திபுலத்தில் உள்ள வளவுப் பற்றையிலிருந்து பெண் சிசு ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இச் சம் பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

பற்றைக்குள் குழந்தையைக் கண்ட அயலவர்கள் குழந்தையை காரைநகர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின் குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்துக்குச் சென்ற ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment