ஹசலக்க - உடகல்தேபொக்க பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (07) காலை 09.30 அளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மேற்கொண்ட தாக்குதலிலேயே இருவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் 41 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment