March 06, 2012

உருளைக்கிழக்கு இறக்குமதி தீர்வை 10 ரூபாவால் அதிகரிப்பு


மார்ச் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ கிராமின் இறக்குமதி தீர்வை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி தீர்வை 20 ரூபாவாக இருந்த நிலையில் தற்போது 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment