January 25, 2012

யாழ். நகரில் வீதி விபத்து; ஒருவர் காயம்

யாழ். நகரில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

யாழ் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று காலை, கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.போ.ச பேரூந்தும் அருகில் வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதனாலேயே இவ் விபத்து நேர்ந்துள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பேரூந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியவுடன் பேரூந்தின் சக்கரத்திற்குள் சிக்கியுள்ளது.

No comments:

Post a Comment