▼
January 26, 2012
அரசியல் கட்சிகள் சிலவற்றுடன் இணைந்து இயங்கும் புலிகள்?
விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் அரசியல் கட்சி களில் இணைந்து செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் போர் நிறை வடைந்துள்ள போதிலும், சில பயங்கரவாதிகள் அரசியல் கட்சிகளுடன் இணைந்து நாட் டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முய ற்சி செய்து வருவதாக பாதுகாப்புச் செய லாளர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நட வடிக்கைகளில் ஈடுபட்டு காணாமல் போவோர் குறித்து அரசாங்கமோ, இராணு வமோ பொறுப்பு சொல்லாது என்றும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் பயங்கரவாதி களுக்கு ஆதரவளித்து வருகின்றன எனவும் அவர் குறிப் பிட்டுள்ளார்.
மேலும், விடுத லைப் புலி அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில், புலனாய்வுத் தரப்பினர் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்த ரீதியாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும், அந்த அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றும் நபர்கள் இருப்பதை மறந்துவிடக்கூடாது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment