Latest News

July 31, 2011

பருத்தித்துறையில் கோழிக் கூட்டில் சிக்கிய வெள்ளை நிற நாகபாம்பு!(Photo in)
by admin - 0

ஐந்து அடி நீளம் கொண்ட அபூர்வமான வெள்ளை நிற நாகபாம்பு ஒன்று பருத்தித்துறையில் உள்ள ஒருவரின் வீட்டின் கோழிக் கூட்டில் பிடிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை, வியாபாரிமூலை, இராவாலை பகுதியில் சி.இராதாகிருஸ்ணன் என்பவரின் வீட்டிலுள்ள கோழிக்கூட்டில் இந்த வெள்ளைநிற நாகம் பிடிபட்டது. தற்போது இந்தப் பாம்பைப் பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் ஆர்வத்துடன் அங்கு கூடிய வண்ணம் உள்ளனர். இது தொடர்பாக வவுனியா வனவிலங்குப் பிரிவுக்கு வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது
Read More

அஜீத்துடன் நடித்த அனுபவம் குறித்து..த்ரிஷா பேட்டி
by admin - 0

நான் இன்றைக்கு நடிக்கும் படங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் எனக்கான மவுசு எப்போதும்போலத்தான் உள்ளது என்கிறார் நடிகை த்ரிஷா.

திருமணம், ரகசிய நிச்சயதார்த்தம், படங்கள் தோல்வி என தொடர்ந்து வரும் செய்திகளால் நடிகை த்ரிஷாவின் மார்க்கெட் வீழ்ச்சியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அவர் அஜீத்துடன் நடித்த மங்காத்தா வெளியாகிறது. இதனால் தனது செல்வாக்கு மீண்டும் பழைய உச்சத்தை தொடும் என நம்புகிறார் த்ரிஷா.

மங்காத்தா வெளியாவதையொட்டி அஜீத்தும் த்ரிஷாவும் மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அப்படி த்ரிஷா கொடுத்த பேட்டி இது:

அஜீத்துடன் நடித்த அனுபவம் குறித்து...

அஜீத் ஜோடியாக ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளேன். மங்காத்தா மூன்றாவது படம். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். மங்காத்தா ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம். நான் நல்ல ரோலில் வருகிறேன். ரசிகர்களை படம் கவரும்.

மங்காத்தாவில் கவர்ச்சியாக நடித்துள்ளீர்களாமே?

அதெல்லாம் இல்லை. இதில் நான் ஒரு அப்பாவிப் பெண். அதில் எனக்கும் அஜீத்துக்குமான காதலும் இருக்கும். கவர்ச்சி இருக்காது.

வேறு இந்திப் புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லையே?

காட்டா மிட்டாவுக்கு பிறகு சில இந்திப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் ஒப்புக்கொள்ள வில்லை.

தென்னிந்திய நடிகைகள் இந்திப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லையா?

என்னைப் பொறுத்த வரைபாலிவுட் வரை போவதே பெரிய ஸ்டெப்தான். அங்கு முழு கவனத்தையும் செலுத்தினால் முன்னேற முடியும். எனக்கு சென்னையை விட்டு போக விருப்பம் இல்லை. இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பது கஷ்டமான ஒன்று.

படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

மாதம் 30 நாட்களும் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. ரிலாக்ஸாக நடிக்க விரும்புகிறேன்.

முன்பு மாதிரி த்ரிஷா பரபரப்பாக இல்லையே... உங்கள் முக்கியத்துவம் குறைந்துவிட்டதா?

நான் அப்படி நினைக்க வில்லை. குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதால் அப்படி நினைக்கலாம். வந்த படங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு நடித்து இருந்தாலும் என்னை விமர்சிப்பார்கள். நடிகைகள் சினிமாவில் இருப்பது குறைவான நாட்கள்தான். இதில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கவேண்டும். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் என் செல்வாக்கு சரியவில்லை.

நிறைய நடிகைகள் வருகிறார்களே, போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?

நான் போட்டியாக யாரையாவது நினைத்தால்தானே இந்தப் பிரச்சினை. 10 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தேன். என் திறமையால் இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். புதுமுக நடிகைகள் எனக்குப் போட்டியில்லை. பத்து வருடங்களுக்கு முன் என்னோடு அறிமுகமான நடிகைகளைத் தான் போட்டியாக கருதுகிறேன். அப்படிப் பார்த்தால் இப்போது எனக்கு போட்டியே இல்லை. புதுமுகங்கள் வருகை என்பது இயல்பானது. பத்தாண்டுகளுக்கு முன் நானும் புது நடிகையே.
Read More

கறவைமாடுகள் வளர்ப்பில் இனப்பெருக்க மேலாண்மை
by admin - 0

நாம் செய்யும் மிகப்பெரிய தவறு மாடுகள் பால் கொடுக்கும் வரைக்கும் அதனுடைய சினை பற்றியோ, சினை பருவ அறிகுறிகளை பற்றியோ, சினை ஆக்குவதற்கு தேவையான பராமரிப்பு முறைகளை பற்றியோ கண்டுகொள்வதே இல்லை. இதுவே கறவை மாடு வளர்ப்பின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது.
உங்கள் மாடுகளை கன்று ஈன்ற மூன்று மாதத்திற்குள் சினை ஆக்கினால் மட்டுமே உங்களால் கறவை மாடு வளர்ப்பில் அல்லது பால் பண்ணை தொழிலில் மிக சிறந்த லாபத்தை காண முடியும். கன்று ஈன்ற இரண்டாவது மாதத்திற்குள் மாடுகள் சினை பருவத்திற்கு வந்துவிடும். மேலும் மாடுகள் ஒவ்வொரு 21 நாட்களுக்கு ஒருமுறை சினை பருவத்திற்கு வரும். மாடுகளை சினையாக்க ஒவ்வொரு சினை பருவமும் மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு மாடுகள் சினை பருவத்திற்கு வந்தவுடன் மாடுகளில் கீழ்வரும் அறிகுறிகள் தென்படும்.
* மாடுகள் கத்திக்கொண்டே இருக்கும்.
* மற்றொரு மாட்டின் மீது தாவும்.
* கண்ணாடி நிறத்தில், கெட்டியாக திரவம் அறையிலிருந்து வழிந்தோடும்.
* தினமும் கொடுக்கும் பாலைவிட, பாலின் அளவு சற்று குறைவாகவே இருக்கும்.
* மிகுந்த சுறுசுறுப்பாக இருக்கும்.
மாடுகள் வளர்ப்போர் மேற்சொன்ன சினை பருவ அறிகுறிகளை நன்கு தெளிவுற தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கீழ்வருவனவற்றை கடைபிடிப்போம்! கறவை வளர்ப்பில் வெற்றி பெறுவோம்!
* கன்று ஈன்று 7-10 நாட்கள் கழித்து மாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும்.
* கன்று ஈன்று 10-15 நாட்கள் கழித்து மாடுகளுக்கு கால்சியம் கால்நடை மருத்துவர் மூலம் போட்டுக்கொள்ள வேண்டும்.
* கன்று ஈன்ற 30 நாட்கள் கழித்து தாது உப்பு கலவை (மினரல் மிக்சர்) 30 கிராம் முதல் 50 கிராம் வரை இரண்டு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்.
* பசுந்தீவனங்கள் கிடைக்கப் பெறாத மாடுகளுக்கு வைட்டமின் ஏ (உயிர்ச்சத்து ஏ) ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் மாடுகள் சினை பருவத்திற்கு முறையாகவும், தகுந்த (21 நாட்கள்) இடைவெளியிலும் வருமாறு செய்யலாம். மேலும் கன்று ஈனும் சமயத்தில் ஈன்ற கன்றுகள் குருட்டு தன்மை இல்லாதவாறும் இருக்க உதவி செய்யும்.
* மாடுகள் சினை பருவத்திற்கு வந்தவுடன் கால்நடை மருத்துவரை அணுகி காலை, மாலை இரு வேளைகளிலும் சினை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் சினை ஊசிக்கும் இரண்டாவது சினை ஊசிக்கும் 8 மணி நேர இடைவெளி இருத்தல் அவசியம். ஒரே நேரங்களில் இரண்டு சினை ஊசி போட்டுக் கொள்வதைவிட மேற்சொன்ன முறையில் சினை ஊசி போடும்போது மாடுகள் சினை ஆவதற்கான வாய்ப்பு அதிகமாக பெறுகின்றன.
* மேலும் ஒரு சில மாடுகள் அவற்றின் கன்று ஈனும் காலத்தில் நஞ்சு கொடியை வெளியே தள்ளுவதில்லை. அப்படிப்பட்ட மாடுகளில் கால்நடை மருத்துவர்களால் நஞ்சுகொடி கைகளினால் மாடுகளின் கருப்பையிலிருந்து வெளியே எடுக்கப்படுகிறது. இத்தகைய மாடுகளில்தான் சினையாக்குவதில் சிரமம் ஏற்படுகின்றது அல்லது காலம் தாழ்த்திய சினை ஏற்படுகின்றது. கீழ்வருவனவற்றை கடைபிடிப்பதன் மூலம் காலம் தாழ்த்திய சினையை தவிர்க்கலாம்.
1. நஞ்சு கொடி எடுக்கப்பட்ட மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கால்நடை மருத்துவரின் சிகிச்சை மாடுகளுக்கு அவசியம்.
2. கன்று ஈன்ற 30வது நாட்களில் இருந்து மினரல் மிக்சர் (30 முதல் 50 கிராம் வரை) 2 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்.
மாடுகள் சினை பருவத்திற்கு வந்தவுடன் முதல் பருவத்தில் சினை ஊசி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கால்நடை மருத்துவரை அணுகி கருப்பை எதிருயிரி மருந்து (யூடிரின் ஆன்டி பயாடிக்) கொண்டு கருப்பையை சுத்தம் செய்ய வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முறை கருப்பையை சுத்தம் செய்தபின்னர் அடுத்து வரும் சினை பருவத்தில் மாடுகளுக்கு சினை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.
Read More

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்
by admin - 0

டோக்கியோ: ஜப்பானில் இன்று அதிகாலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த புகுஷிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கம்காரணமாக எந்த வித சேதமும் ஏற்படவில்லை என்றும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள
Read More

July 30, 2011

பெண் உருவத்தில் பூ காய் photo in
by admin - 0



     தாய்லாந்து நாட்டிலே ஒரு அதிசய மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் பூக்கின்றன. இந்த வினோத மரம் Nareepol என்றழைக்கப்படுகிறது. இது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன.   












                                
 

                                          




Read More

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்!
by admin - 0


ஏழு தலை பாம்பை பிரசவித்து உள்ளார் என்று பரபரப்புத் தகவலை தெரிவித்து உள்ளார் சுவாசிலாந்து நாட்டு யுவதி ஒருவர். இவரின் பெயர் Patience Tsabedze. வயது 27. பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி. தீய சக்திகளை முன்பு வழிபட்டு வந்தவர். கடும் வயிற்றுக் குத்து திடீரென்று ஏற்பட்டது என்றும் தொடர்ந்து ஏழு தலை பாம்பை பிரசவித்தார் என்றும் கூறுகின்றார்.




பாம்பை கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை பிரசவித்தார் என்கின்றார். ஆனால் கர்ப்பம் தரித்து இருக்கவில்லை என்றும் கூறுகின்றார்.

மலசலகூடத்துக்குள் பாம்பு நுழைந்தது என்றும் அலுவலகத்தில் இருந்த கணவன் தகவல் அறிந்து வந்து பார்த்தபோது மலசலகூடத்தில் பாம்பை கண்டுகொண்டார் என்றும் குறிப்பிடுகின்றார் யுவதி. பாம்பை கொல்ல கணவன் முயன்றபோது தண்ணீருக்குள் மறைந்து விட்டது என்கின்றார்.

வாழ்க்கையில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் தீய சக்திகளை வழிபடுகின்றமையை கை விட்டு விட்டார் என்றும் அதற்குப் பின்னர் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சம்பவங்கள் நேர்கின்றன என்றும் யுவதி ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கின்றார்.

லீற்றர் கணக்கில் இரத்த வாந்தி எடுக்கின்றார் என்றும் வாந்தியுடன் சேர்த்து புழுக்கள், மீன்கள், சிலந்திகள் போன்றன வயிற்றுக்குள் இருந்து வெளியில் வருகின்றன என்றும் சொல்லுகின்றார்.

தீய சக்திகள் கோபம் அடைந்து விட்டன என்றும் ஒவ்வொரு இரவும் ஏதோ ஒரு வகையில் பெரும்பாலும் துன்புறுத்துகின்றன என்றும் சொல்லி கவலைப்படுகின்றார் யுவதி.

ஏழு தலை பாம்பை வாழ்க்கையில் முதல் தடவையாக பார்த்தார் என்று உடல் புல்லரிக்கக் கூறுகின்றார் கணவன்.


இதுதொடர்பான செய்தி
Read More

திமுக கூட்டணியை விட்டு விடுதலைச் சிறுத்தைகளும் விலக முடிவு செய்துள்ளது.
by admin - 0

பாமகவைத் தொடர்ந்து திமுக கூட்டணியை விட்டு விடுதலைச் சிறுத்தைகளும் விலக முடிவு செய்துள்ளது.

திமுக கூட்டணியை விட்டு விலகி பாமக தலைமையிலான புதிய அணியில் சேருவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், பாமக தலைவர் ராமதாஸ் அழைப்பு விடுத்தால், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, பாமக கூட்டணியில் சேர்வது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடமும் பேசியிருக்கிறேன்.

தற்போது என்னுடைய எண்ணத்தின்படி, பாமக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ராமதாசின் இந்த முடிவை வரவேற்கிறேன். ராமதாஸ் அழைப்பு விடுத்தால், எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து, பாமக அணியில் சேர்வது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.
Read More

மு.க., ஸ்டாலின் கைது - திருவாரூரில் பதட்டம்
by admin - 0


தி.மு.க., மாவட்ட செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வந்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாஜி துணை முதல்வர் மு.க., ஸ்டாலின், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் தி.மு.க,வினரை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பதட்டம் நிலவுவதால் போலீசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். தீக்குளிக்க முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டாலின் கைது ஏன் ? சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க, வினர் போராட்டம் நடத்தினர். இதில் திருவாரூர் கொடராச்சேரியில் மாணவர்கள் மறிக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல விடாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் திரும்பி சென்று கொண்டிருந்த அரசு பஸ் லாரி மீது மோதி குளத்தில் விழுந்தது. இதில் சிக்கி மாணவன் விஜய் என்பவர் உயிரிழந்தார். இதற்கு மாவட்ட தி.மு.க.,வினரே காரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன் என்பவரை கைது செய்ய போலீசார் இன்று திட்டமிட்டிருந்தனர். மொழிப்போர் தியாகி பக்கீர்மைதீன் படத்திறப்பு விழாவிற்கு மு.க., ஸ்டாலின் திருவாரூர் வந்தார். இவர் திருத்துறைப்பூண்டி அருகே மணலியில் வந்து கொண்டிருந்தபோது மாவட்ட எஸ்.பி., தினகரன் தலைமையில் போலீசார் ஸ்டாலினுடன் வந்த வாகனத்தை மறித்தனர். கலைவாணனை கைது செய்கிறோம் என்றனர். இதற்கு ஸ்டாலின் காரணம் எதுவும் இல்லாமல் மாவட்ட செயலரை கைது செய்ய அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் ஸ்டாலினையும் கைது செய்து திருவாரூர் அழைத்து சென்றனர். இந்த கைது காரணமாக திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ,மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கல்யாண மண்டபத்தில் ஸ்டாலின்: மறியலில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், இவரது ஆதரவாளர்களுடன் பைபாஸ் ரோட்டில் உள்ள கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


மத்திய அமைச்சர் கைதா ? : மத்திய அமைச்சர் பழநி மாணிக்கமும் மறியலில் ஈடுபட்டார். முதலில் இவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இவரை போலீசார் கைது செய்தனரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. ஆனால் திருவாரூர் கொண்டு செல்லப்படும் ஸ்டாலினுடன், பழனிமாணிக்கமு் செல்கிறார்.


சல, சலப்புக்கு அஞ்ச மாட்டோம்: ஸ்டாலின் பேட்டி : இந்த பிரச்னை குறித்து நிருபர்களிடம் பேசிய மு.க., ஸ்டாலின் கூறியதாவது: வரும் 1 ம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க., போராட்டம் நடத்தவிருக்கிறது. இந்த போராட்டத்தை முறியடிக்கும் விதமாக தமிழக அரசு இப்படி கைது அச்சுறுத்தலை காட்டி வருகிறது. தி.மு.க., பனங்காட்டு நரி, எந்த சல.சலப்புக்கும், அராஜகத்திற்கும் அஞ்சாது. இதற்கெல்லாம் மக்கள் மன்றத்திலும், கோர்ட்டிலும் பதில் சொல்லியாக வேண்டும்.

அத்துமீறி போகிறது : கருணாநிதி பேட்டி : டாலின் கைது கண்டித்து இன்று பேட்டியளித்த தி,மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில்; கடந்த ஆட்சியிலும் போராட்டக்காரர்கள் எப்படி நடத்தப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும், காலையில் கைது செய்து மாலையில் விடுவோம். ஆனால் தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில் பழிவாங்கும் நடவடிக்கையாக நடக்கிறது. இதற்கு மேலும், மேலும் தூபம் போடும் காவல்துறையின் நடவடிக்கை அத்துமீறி போய்க்கொண்டிருக்கிறது. வரும் 1ம் தேதி போலீசாருக்கெதிரான போராட்டம் அறவழியில் திட்டமிட்டபடி நடக்கும் இவ்வாறு அவர் கூறினார்.


வீரபாண்டி ஆறுமுகமும் இன்று கைது : சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், இன்று 3 வது நாளாக கையெழுத்து போட வந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைப் போலீசார் மீண்டும் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்ட வீரபாண்டியை கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் கொண்டு செல்கின்றனர். சுபம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியது தொடர்பான வழக்கில் இவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. போலீஸ் நிலையம் முன் கூடியிருந்த தி.மு.க.,வினர் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். போலீசாருடன் தி.மு.க.,வினர் மோதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், உடனடியாக நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சேலம், அங்கம்மாள் காலனி நிலம் மற்றும் பிரீமியர் மில் நில அபகரிப்பு வழக்கில், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம், ஐகோர்ட் உத்தரவுப்படி, மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், 3 நாள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, "மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில், தினமும் காலை 8 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், எத்தனை நாள் ஆஜராகி, கையெழுத்துப் போட வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

அதன்படி, முதல் நாளான 28ம் தேதி காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டிய வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடம் காலதாமதமாக, காலை 8.10 மணிக்கு ஆஜரானார். இந்த காலதாமத்துக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரும்படி போலீசார் வலியுறுத்தினர். அதனால், வீரபாண்டி ஆறுமுகம் டென்ஷனானார். 2வது நாளான நேற்று, வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடத்துக்கு முன்னதாகவே, காலை 7.50 மணிக்கு, காரில் ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினார். 100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டேஷனுக்குள், 7.51 மணிக்கு நுழைந்த வீரபாண்டி ஆறுமுகம், 9 நிமிடம் நாற்காலியில் அமர்ந்தபடி காத்திருந்தார். சரியாக 8 மணி ஆனதும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு, 8.01 மணிக்கு வெளியே வந்தார். திரண்டிருந்த தி.மு.க.,வினர், வீரபாண்டி ஆறுமுகத்தை வாழ்த்தியும், அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது, சிரித்த முகத்தோடு போலீசார், 8.05 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை வழியனுப்பி வைத்தனர்.

3வது நாளாக அவர் கையெழுத்திட வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். இந்நேரத்தில் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கைது : சென்னை திரு‌வல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திடீரென கைது‌ செய்யப்பட்டார். கைதான அன்பழகன் தென்சென்னை மாவட்ட தி.மு.க.செயலாளர் ஆவார். இவர் தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டில் இரு்ந்த போது போலீசார் வரை அதிகாலையில் கைது செய்தனர். நிலவிவகாரம் தொடர்பாக உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மில் அதிபர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக அவர் திருப்பூர் அழைத்து செல்லப்படுகிறார்.
2பஸ்கள் உடைப்பு : இவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., தொண்டர்கள் சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். கலெக்டர் ஆபீஸ் மற்றும் அரசு ஆஸ்பத்திரி அருகே 2 பஸ்கள் ‌கண்ணாடி நொறுக்கப்பட்டன. இதனையடுத்து நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Read More

ஆறு அறிவுள்ள நாய் video in
by admin - 0

Read More

சிக்கலில் இன்னொரு அமெரிக்க பல்கலைக்கழகம்.:
by admin - 0

 அமெரிக்காவில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்களை சேர்ததற்காக பிரச்சனையில் சிக்கியுள்ளது நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகம்( University of Northern Virginia).

வாஷிங்டனில் உள்ளது நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகம். அங்கு 2 ஆயிரத்து 400 மாணவ-மாணவியர் படிக்கின்றனர். இதில் 2 ஆயிரம் பேர் இந்தியர்கள். அதில் பெரும்பாலானவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மாணவர்களை சேர்த்துள்ளதை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில்தான் கலிபோர்னியாவில் ட்ரை வேலி பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்ததால் அது மூடப்பட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் அந்த பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்களின் கால்களில் ரேடியோ டாக் கட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது இன்னொரு அமெரிக்க பல்கலைக்கழகம் மோசடியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் முந்தைய சம்பவம் போல இந்த முறை அமெரிக்க அதிகாரிகள் அவசரப்படவில்லை. அதனால் தான் நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டு அதுவும் 1 மாத கால அவகாசமும் கொடுத்துள்ளனர். மேலும், அங்கு படிக்கும் மாணவர்கள் அங்கேயே தொடரலாம், அல்லது வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறிக்கொள்ளலாம் அல்லது இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இம்முறை மாணவர்கள் மீது கைது நடவடிக்கையோ, ரேடியோ டாகோ இருக்காது என்று இந்திய தூதரகத்திடம் அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படமாட்டாது. அவர்கள் அந்த விசாவை வைத்துக் கொண்டே வேறு பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும். இல்லையெனில் நாடு திரும்ப வேண்டும்.

நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Read More

July 29, 2011

தான் ஆணா, பெண்ணா என்ற குழப்பத்தில் ஹிலாரி
by admin - 0

 அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தான் ஆணா, பெண்ணா என்று குழப்பத்தில் இருப்பதாக பிரபல அமெரிக்க பேஷன் நிபுணர் டிம் கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல பேஷன் நிபுணர் டிம் கன். அவர் அன்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளார். அவர் நியூயார்க் செனட்டராகவும், முன்னாள் முதல் குடிமகளாகவும் இருந்துள்ளார். பின் ஏன் இப்படி ஆடை அணிகிறாரோ?

ஹிலாரி தான் ஆணா, பெண்ணா என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் தொள தொளவென உள்ள ஆண்களின் ஆடைகளை அணிகிறார். அது அவருக்கு சற்றும் பொருந்தவில்லை என்றார்.
Read More

வெள்ளாடு வளர்ப்பு
by admin - 0

வெள்ளாடு ""ஏழைகளின் பசு'' என்று அழைக்கப் படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.
ஒரு ஆட்டுக்கு 15 சதுரடி: வளர்ந்த ஒரு ஆட்டுக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும். நாம் வளர்க்க எண்ணும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக்கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலேயே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் அமைக்க வேண்டும். பட்டிக்குள் கிடாக்கள், குட்டிகள், சினை ஆடுகள், வளரும் ஆடுகள் என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும்.
தண்ணீர் கவனம்: காலை ஒன்பது மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்துவிட வேண்டும். பதினோரு மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊறவைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக்கவிட்டால் நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
வெயில் நேரத்தில் மேய்ச்சல் வேண்டாம்: வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேயவிடும்போது சோர்ந்துவிடும். அந்த நேரங்களில் பட்டியில் அடைத்துவிட்டு வேலிமசால், முயல்மசால், கோ-4 மாதிரியான பசுந்தீவனங்களை நறுக்கிப்போட வேண்டும். தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக்கொடுப்பது நல்லது. பகல் மூன்று மணிக்குப் பிறகு ஐந்தரை மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம். மூன்று மாதங்க ளுக்கு ஒருமுறை ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் போடவேண்டிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டுவர வேண்டும்.
இரண்டு வருடத்தில் மூன்று ஈற்று எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்துக்கு வந்துவிடும். அந்த சமயத்தில் நல்ல தரமான கிடாக்களோடு சேர்த்துவிட வேண்டும். ஆட்டுக்கு சினைப்பருவம் ஐந்து மாதங்கள். குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் அடுத்த பருவத்திற்கு தயாராகிவிடும். எட்டு மாதத்திற்கு ஒருமுறை குட்டி ஈனுவதால், சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு இரண்டு குட்டிகள் கிடைக்கும். நாற்பது நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்கவிட்டு பிறகு பிரித்துவிட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும். 
Read More

விண்வெளியை அடைந்தது சீனாவின் புதிய செயற்கைக்கோள்
by admin - 0

 ஜூலை 27: சீனா புதன்கிழமை புதிய செயற்கைக்கோளை செலுத்தியது. இது விண்வெளியை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.

பூமியில் உள்ள பொருள்கள் மற்றும் வாகனங்கள் இருக்கும் இடத்தை அறியும் ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியை இப்போது அமெரிக்காவிடமிருந்து சீனா பெற்று வருகிறது. இந்நிலையில் தமக்கென சொந்தமாக ஜிபிஎஸ் தொழில்நுட்ப முறையை உருவாக்க அந்நாடு முயற்சித்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு 2000-ம் ஆண்டில் இருந்து பல செயற்கைக்கோளை சீனா விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதன் ஒருபகுதியாகவே இப்போது புதிய செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியின் சிஜுவான் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. மார்ச்- 3ஏ என்ற ராக்கெட், செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணை நோக்கி பாய்ந்ததும் அந்நாட்டு விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.






Read More

இணைந்த அஜீத், விஜய் – புதிய படங்கள்
by admin - 0




Read More

கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?
by admin - 0

கலைஞர் டிவி சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டவிதியின் கீழ் கொண்டுவர அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன," என்றார்.

கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீதப் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 ஜி விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள டிபி ரியலிட்டியின் சினியுக் நிறுவனத்திலிருந்து ரூ 214 கோடி கடனாகப் பெற்ற விவகாரத்தில்தான் இப்போது கனிமொழியும் சரத்குமாரும் திகாரில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

60 வயதுக் குழந்தையைப் பிரசவித்த 92 வயதுப் பாட்டி (படங்கள் இணைப்பு)
by admin - 0


92 வயது மூதாட்டி ஒருவர் 60 வயதுக் குழந்தை ஒன்றை சீனாவில் சில நாட்களுக்கு முன் பிரசவித்து உள்ளார். என்ன அதிசயமாக இருக்கின்றதா? மூதாட்டியின் பெயர் Huang Yijun. சீனாவின் தென்பகுதியைச் சேர்ந்தவர்.

குழந்தை இறந்துதான் பிறந்து இருக்கின்றது. இவர் உண்மையில் ஒரு கல் குழந்தையைத்தான் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சுமந்து வந்திருக்கின்றார்.

வயிற்றில் உருவான சிசு 1947 ஆம் ஆண்டு இறந்து இருக்கின்றது. இறந்த சிசுவை வெளியில் எடுக்க வெண்டும் என்று வைத்தியர்கள் அந்நாட்களில் சொல்லி இருக்கின்றனர்.

ஆனால் வறுமை காரணமாக இவர் பேசாமல் இருந்து விட்டார். இறந்த சிசு வயிற்றுக்குள் கல்லைப் போல் ஆகி விட்டது.
www.vivasaayi.com

இது மிகவும் அரிதாக ஏற்படக் கூடிய நோய். முட்டை கருப்பைக்குள் வெளியில் தங்கி விடுகின்ற அதே சமயம் மகப் பேறு தோல்வி அடைகின்றபோது இந்நோய் ஏற்பட்டு விடுகின்றது.
Read More

ஜிமெயில் பெட்டியில் அதிக மெயில்கள்
by admin - 0

அநேகமாக இமெயில் பயன்படுத்துபவர்கள் அனைவருமே, கூகுள் தரும் ஜிமெயில் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். அதிக மெயில் தங்கும் வசதி மற்றும் பல கூடுதல் செயல்பாடு களைக் கொண்டு இயங்குவதால், ஜிமெயில் நம் டிஜிட்டல் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது.
ஜிமெயில் இயக்கப்பட்டவுடன் நமக்குக் கிடைக்கும் இன் பாக்ஸில் 50 மெயில்கள் காட்டப்படும். இதற்கு முந்தைய மெயில்களை நாம் ஐம்பது ஐம்பதாகப் பெற்றுப் பார்க்கலாம். முதல் தோற்றத்திலேயே கூடுதலாகக் காட்டும் படியும் ஜிமெயிலில் செட்டிங்ஸ் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செயல்படவும்.
பிரவுசரை இயக்கி ஜிமெயில் தளம் செல்லவும். பின்னர், மேலாக வலது மூலையில் உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் Mail Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு ஜெனரல் டேப்பிற்கு அருகே மேலாக, Maximum Page Size என்பதைப் பார்க்கலாம். இங்கு Show X conversations per page என்ற இடத்தில் உள்ள அம்புக்குறி மீது கிளிக் செய்திடவும். வழக்கமாக இதில் 25 என இருக்கும். இதனை 50 அல்லது 100 என மாற்றி அமைக்கவும். பின்னர், பக்கத்தின் கீழாகச் சென்று Save changes என்பதில் கிளிக் செய்திடவும். 
உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் இன்னும் சற்று நீளமாக மாறியிருப்பதனைக் காணலாம். உங்களுக்கு வந்த படித்த, படிக்காத இமெயில்களை அங்கு சற்றுக் கூடுதலான எண்ணிக்கையில் இப்போது காணலாம். 
Read More

பத்து வயதான சிங்கம் பக்கவாதத்தால் படுக்கை--படம் உள்ளே
by admin - 0


Get cash from your website. Sign up as affiliate.




Read More

July 28, 2011

பிறந்த நாளில்... மனைவி இயக்கத்தில் தனுஷ்!
by admin - 0


தேசிய விருது பெற்ற சந்தோஷம், மாமனார் ரஜினி நலம் பெற்று வீடு திரும்பிய உற்சாகம், கூடவே ரஜினி குடும்பத்தின் அதிகாரப்பூர்வ தொடர்பாளர் எனும் அளவுக்கு அதிகப்படி உரிமை கிடைத்த மகிழ்ச்சியிலிருக்கும் தனுஷுக்கு இன்று பிறந்த நாள்.

இந்த 28வது பிறந்த நாளில் ரஜினியை சந்தோஷப்படுத்தும் இன்னொரு காரியத்தையும் செய்கிறார்... மனைவி ஐஸ்வர்யாவை இயக்குநராக புரமோட் செய்துள்ளார் தனுஷ்.

ஆம்... ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் தனுஷ். தனுஷ் பிறந்த நாளான இன்றே இந்தப் புதுப்படமும் துவங்குகிறது.

இந்தப் படத்தில் தனுஷும் ஸ்ருதி ஹாஸனும் ஜோடி சேர்கிறார்கள். புதுமுகம் ஒருவர் இசையமைக்கிறார். இன்னும் பெயரை அறிவிக்கவில்லை ஐஸ்வர்யாவும் தனுஷும். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்துக்காக ஒரு பாடல் கூட பதிவு செய்யப்பட்டுவிட்டது. விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மேனன் பாடியுள்ளனர். இந்தப் பாடலைத்தான் இன்று ஷூட் செய்கிறார்கள். படப்பிடிப்பு சென்னை மற்றும் புறநகரிலேயே இருக்குமாம்.

இந்தப் படப்பிடிப்பு காரணமாக, ரசிகர்களை நாளை சந்திக்கிறாராம் தனுஷ்.
Get cash from your website. Sign up as affiliate.
Read More

பாலை பாதுகாக்கும் முறைகள்
by admin - 1

கொதிக்கவைத்து பாலின் தரமறிதல்: 5 மில்லி பாலை சோதனைக்குழாயில் எடுத்து சூடுசெய்ய வேண்டும். பொங்கி வந்தால் நல்ல பால். திரிந்துபோனால் பால் கெட்டுவிட்டது என அறிந்துகொள்ளலாம்.
* பால்மானிச் சோதனை: பால்மானியின் அளவு 24க்கு குறைந்திருந்தால் தண்ணீர் கலந்த பால் எனலாம். எருமைப்பாலில் 26-28, பசும்பாலில் 28-30, கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் 30-32 இருக்கும்.
* கொழுப்பு அறியும் சோதனை: கெர்பர் பியுட்டிரா மீட்டரில் 10 மி.லி, கெர்பர் அமிலம், 10.75 மிலி பால், 1 மி.லி. அமைல் ஆல்கஹால் சேர்த்து கெர்பர் சென்டிரிபியூஜில் வைத்து 3 நிமிடம் சுற்றினால் கொழுப்பு தனியாக தெரியும். பசும்பாலில் 3-5 சதம், எருமைப்பாலில் 6-8 சதம் கொழுப்புச்சத்து இருக்கும்.
* கொழுப்பற்ற திடப்பொருளின் அளவு: 0.25 து பால்மானி அளவு (27 டிகிரி செ) + (0.25 து கொழுப்புச்சதம்) + 0.44.
* குளிர வைத்தல்: பாலைக் கேன் கூலர் (அ) பல்க் கூலரில் 2டிகிரி செ.க்கு குளிரவைத்து ஒரு நாள் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.
* பதப்படுத்துதல்: பாலை 63 டிகிரி செ.க்கு 10நிமிடம் சூடுசெய்து 5 டிகிரி செ.க்கு குளிரவைத்து ஒரு நாள் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.
* பதப்படுத்துதல்: பாலை 63 டிகிரி செ.க்கு 30 நிமிடங்கள் சூடுசெய்து 5 டிகிரி செ.க்கு குளிரவைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் பாதுகாக்கலாம். இதற்கு குறைந்த வெப்பம், அதிக நேரம் பாஸ்டுரைசேஷன் என்று பெயர்.

கிரீம், வெண்ணெய், நெய் தயாரித்தல்

* கிரீம்: (40 சதம் கொழுப்பு) - பாலை கிரீம் செப்பரேட்டர் மிஷினில் ஊற்றி இயக்கினால் கிரீம் ஒரு புறமும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மறுபுறமும் பிரிந்துவரும். கிரீம் எடுப்பதற்கு கறந்த பாலை அப்படியே உபயோகப்படுத்த வேண்டும். குளிர்விக்கப்பட்ட பாலில் கிரீம் எடுக்க முடியாது.
* வெண்ணெய்: ( 80 சதம் கொழுப்பு) - சூடு செய்து ஆறவைத்த கிரீமை குளிர்சாதனப் பெட்டியில் 1 நாள் வைத்திருந்து வெண்ணெய் கடையும் இயந்திரம் மூலம் வெண்ணெய் தயாரிக்கலாம். கிரீமை இயந்திரத்தில் கால்வாசி அளவே நிரப்ப வேண்டும். இயந்திரம் சுற்றும்பொழுது 10 டிகிரி செ.க்கு குளிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். வெண்ணெய் உருவான பிறகு மீதமுள்ள நீரை அடியிலுள்ள குழாய் வழியே வெளியேற்ற வேண்டும். இந்த வெண்ணெயில் உண்பதற்கென்றால் 3 சதம் உப்பு சேர்க்கலாம். நெய் தயாரிப்பதற்கு என்றால் உப்பை சேர்க்கக்கூடாது.
நெய்: (99.9 சதம் கொழுப்பு) - கிரீம் (அ) வெண்ணெயைக் காய்ச்சினால் நெய் கிடைக்கும். கிரீமில் உறைமோர் ஊற்றி மறுநாள் காய்ச்சினால் நெய் வாசனையுடன் இருக்கும். கிரீமிலிருந்து நெய் தயாரிக்கும்பொழுது கசடு அதிகமாக இருக்கும்.
Read More

July 27, 2011

குழந்தை நீர்யானையின் அழகிய நடனம் video in
by admin - 0



Read More

காதலன் நீல் நிதின் முகேஷைப் பிரிந்தார் அசின்!
by admin - 0

காதலன் நீல் நிதின் முகேஷைப் பிரிந்துவிட்டார் நடிகை அசின். இதனை உறுதிப்படுத்தும் வகையில், 'எல்லாம் ஓவர்... இனி என்னுடன் பேசாதே, எஸ்எஸ்எம் அனுப்பாதே' என்று முகேஷுக்கு தெரிவித்துள்ளார். 







பிரபல இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ். இவருக்கும், அசினுக்கும் காதல் என மும்பை பட உலகில் கிசு கிசுகள் பரவின. ஏற்கனவே அமீர்கான், சல்மான்கானுடன் இணைத்து பேசப்பட்டார். அவர்களிடம் நட்பாகத்தான் பழகுகிறேன் என்று மறுத்தார். முகேஷும் மறுத்து வந்தார்.

ஆனால் நீல்நிதின் முகேசுடன் அசின் ரகசிய தொடர்பு வைத்திருந்ததை மும்பை பத்திரிகைகள் வெளியிட்டன. இருவரும் ஓட்டல்களில் அடிக்கடி சந்திப்பதாகவும், வெளியூர்களுக்கு சேர்ந்து பயணிப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது.

இந்த நிலையில் இருவருக்கும் தற்போது திடீர் தகராறு ஏற்பட்டு உள்ளது. தொடர்பை முறித்துக் கொள்வதாகவும், இனிமேல் என்னுடன் பேச வேண்டாம் என்றும் நீல் நிதின் முகேசுக்கு அசின் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.

நீல் நிதின் முகேஷ் செல்போனில் அசினுடன் பேச பலதடவை முயற்சித்தும் அவர் போனை எடுக்கவில்லையாம். பிரிவுக்கு காரணம் தெரியவில்லை என்கிறது மும்பை திரையுலகம்.
Read More

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிர
by admin - 0


மும்பை: பிரபல கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவை திருமணம் செய்ய விரும்புவதாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்
  அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.



பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். அதிரடிக்குப் பெயர் போனவர். இவர் ஏற்கனவே டெலிவிஷன் மூலம் சுயவரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு செய்து பரபரப்பு ஏற்படுத்தியவர். கனடாவில் தன் மாமியார் வீடு வரை போய் வந்த அவர், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் துரத்திவிட்டார். 

மும்பையில் நேற்று நடந்த நடன நிகழ்ச்சியொன்றுக்கு ராக்கி சாவந்தை அழைத்து இருந்தனர். அரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். அவர்கள் மத்தியில் ராக்கி சாவந்திடம் சினிமா சம்பந்தமாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

ராக்கியும் சளைக்காமல் பதில் அளித்தார். திடீரென ஊழலுக்கு எதிராக உண்ணா விரத போராட்டங்கள் நடத்தி வரும் யோகா சாமியார் பாபா ராம்தேவ் பற்றி கேள்வி வந்தது. அப்போது ராம்தேவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக திடீரென பதில் அளித்து கூட்டத்தினரை அதிர வைத்தார்.

ராக்கி சாவந்த் மேலும் கூறுகையில், " பாபா ராம்தேவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மற்றவர்களுக்குதான் பாபா. எனக்கு அப்படியில்லை. அவரைப் பார்க்க வேண்டும் என ஆசையாக உள்ளது. எப்போதும் அவர் கூடவே சீடராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் என்னை மணக்க சம்மதித்தால், சந்தோஷமாக உடனே திருமணம் செய்து கொள்வேன்," என்றார்.

ஏதாவதொரு வழியில், சாமியாரை மாமியார் வீட்டுக்கு அனுப்பாம விடமாட்டாங்க போல!Get cash from your website. Sign up as affiliate.

Read More