Latest News

April 30, 2011

இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கப்பல் ரோமில் கண்டுபிடிப்பு
by admin - 0

ரோமானிய பேரரச காலத்திற்குரிய சுமார் 2 ஆயிரம் வருடங்கள் பழைமையான கப்பலொன்று ரோமின் புராதன ஒஸ்டியா துறைமுகத்திற்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீதிப்புணரமைப்பு நடவடிக்கைகளின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கப்பலானது சுமார் 11 மீற்றர் நீளமானதாகும், மேலும் இதுவரை குறித்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன கப்பல்களில் மிகவும் பெரியதாகக் கருதப்படுகின்றது.

இதன் முன்பகுதியும் பின்பகுதியும் சிதைவடைந்து விட்டதாக இதனைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், இக்கண்டுபிடிப்பானது மிகவும் முக்கியமானதொரு நிகழ்வெனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒஸ்டியா எண்டிகா என்றழைக்கப்படும் இத்துறைமுக நகரமானது 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாகும். __
I Have Found It (Kandukondain Kandukondain)
Read More

அருணாச்சலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு எங்கே? மாறுபட்ட தகவல்களால் பரபரப்பு
by admin - 0


இடாநகர் : அருணாச்சலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் மாயமானது. உரிய நேரத்தில் தரையிறங்காததால் ஹெலிகாப்டர் என்னவானது என தேடி கண்டுபிடிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. எதுவும் விபத்தில் சிக்கி விட்டாரா என்ற அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது. . பவன்ஹன்ஸ் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இன்று காலை 10 மணியளவில் தவாங்கில் இருந்து இடாநகர் நோக்கி புறப்பட்டது. காலை 11.30 மணிக்கு அங்கு வந்த சேரவேண்டிய ஹெலிகாப்டர் உரிய நேரத்திற்குள் வரவில்லை. ஹெலிகாப்டர் தவாங்கில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பில் இருந்து விலகியது. கடைசியாக தவாங் அடுத்த செலா பாஸ் பகுதியில் வந்த ஹெலிகாப்டர் ராடரில் தெரிந்தது. அதன் பிறகு 4 மணி நேரமாகியும் ஹெலிகாப்டர் இருக்கும் இடம் தெரியவில்லை. முதல்வருடன் மேலும் 2 பேர் ஹெலிகாப்டரில் இருந்தனர். ஹெலிகாப்டர் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அருணாச்சல முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மாயமானதை தொடர்ந்து, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டன. தேடுதல் பணியில் ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. உள்துறை செயலரின் முதல்கட்ட விளக்கம்: முதல்வர் ஹெலிகாப்டர் மாயமானது குறித்து உள்துறை செயலர் ஜி.கே.,பிள்ளை கூறியதாவது: அருணாச்சலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு புறப்பட்டு சென்ற ஹெலிகாப்டர் எங்கே இருக்கிறது என இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்பு படையினர் ஹெலிகாப்டர் இருக்கும் இடத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வானிலை மோசமாக இருப்பதால் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் சென்ற இரோகாப்டர் - பி 3 ஹெலிகாப்டர் 4 முதல் 5 மாதங்களுக்குள் வாங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், 11. 30 மணி அளவில் இட்டாநகரில் தரையிறங்க வேண்டிய ஹெலிகாப்டர் , மோசமான வானிலை காரணமாக மாற்று வழியில் பூட்டானில அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் இதில் பயணித்த 5 பேரும் பத்திரமாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவி்த்தாக தகவல்கள் வெளியாகின. பூடான் அதிகாரிகள் மறுப்பு: இந்நிலையில், அருணாச்சல பிரதேச முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் பூடான் பகுதியில் தரையிறங்கியதாக கூறப்படுவதை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர். தங்கள் நாட்டு பகுதியில் எந்த ஹெலிகாப்டரும் தரையிறங்கியதாக தங்களுக்கு தகவல் வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதால், டோர்ஜி காண்டு நிலை என்ன என்பது புரியாத புதிராக உள்ளது. சமீபத்திய விபத்தில் 17 பேர் பலி : சமீபத்தில் அருணாச்சலில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கள்ளானதில் 17 பேர் இறந்தனர். கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதியன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இறந்தார். இந்நிலையில் டோர்ஜீகாந்து சென்ற ஹெ லிகாப்டர் மாயமானது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இடாநகர் : அருணாச்சலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் மாயமானது. உரிய நேரத்தில் தரையிறங்காததால் ஹெலிகாப்டர் என்னவானது என தேடி கண்டுபிடிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. எதுவும் விபத்தில் சிக்கி விட்டாரா என்ற அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது. .

பவன்ஹன்ஸ் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இன்று காலை 10 மணியளவில் தவாங்கில் இருந்து இடாநகர் நோக்கி புறப்பட்டது. காலை 11.30 மணிக்கு அங்கு வந்த சேரவேண்டிய ஹெலிகாப்டர் உரிய நேரத்திற்குள் வரவில்லை. ஹெலிகாப்டர் தவாங்கில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பில் இருந்து விலகியது. கடைசியாக தவாங் அடுத்த செலா பாஸ் பகுதியில் வந்த ஹெலிகாப்டர் ராடரில் தெரிந்தது. அதன் பிறகு 4 மணி நேரமாகியும் ஹெலிகாப்டர் இருக்கும் இடம் தெரியவில்லை. முதல்வருடன் மேலும் 2 பேர் ஹெலிகாப்டரில் இருந்தனர். ஹெலிகாப்டர் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அருணாச்சல முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மாயமானதை தொடர்ந்து, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டன. தேடுதல் பணியில் ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.


உள்துறை செயலரின் முதல்கட்ட விளக்கம்: முதல்வர் ஹெலிகாப்டர் மாயமானது குறித்து உள்துறை செயலர் ஜி.கே.,பிள்ளை கூறியதாவது: அருணாச்சலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு புறப்பட்டு சென்ற ஹெலிகாப்டர் எங்கே இருக்கிறது என இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்பு படையினர் ஹெலிகாப்டர் இருக்கும் இடத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வானிலை மோசமாக இருப்பதால் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் சென்ற இரோகாப்டர் - பி 3 ஹெலிகாப்டர் 4 முதல் 5 மாதங்களுக்குள் வாங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், 11. 30 மணி அளவில் இட்டாநகரில் தரையிறங்க வேண்டிய ஹெலிகாப்டர் , மோசமான வானிலை காரணமாக மாற்று வழியில் பூட்டானில அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் இதில் பயணித்த 5 பேரும் பத்திரமாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவி்த்தாக தகவல்கள் வெளியாகின.

பூடான் அதிகாரிகள் மறுப்பு: இந்நிலையில், அருணாச்சல பிரதேச முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் பூடான் பகுதியில் தரையிறங்கியதாக கூறப்படுவதை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர். தங்கள் நாட்டு பகுதியில் எந்த ஹெலிகாப்டரும் தரையிறங்கியதாக தங்களுக்கு தகவல் வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதால், டோர்ஜி காண்டு நிலை என்ன என்பது புரியாத புதிராக உள்ளது.

சமீபத்திய விபத்தில் 17 பேர் பலி : சமீபத்தில் அருணாச்சலில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கள்ளானதில் 17 பேர் இறந்தனர். கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதியன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இறந்தார். இந்நிலையில் டோர்ஜீகாந்து சென்ற ஹெ லிகாப்டர் மாயமானது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
Read More

வெங்காயத்தின் மூலம் ஐபாட்(IPod)களை சார்ச் செய்யலாம்: வீடியோ விளக்கம்
by admin - 0

ஒன்றும் தெரியாதவர்களை வெங்காயம் என ஏளனம் செய்வதுண்டு. ஆனால் அந்த வெங்காயத்தின் மகத்துவம் ஏராளம். வைத்தியத்திற்கு மட்டும்தான் என நினைத்து விடாதீர்கள் எம் தொழில்நுட்ப தேவைக்கும் உதவ வந்து விட்டது வெங்காயம். ஆம் எமது ஐ.பாட் களை இந்த வெங்காயத்தின் மூலம் சார்ச் செய்யலாம் என கண்டறியப்பட்டுள்ளது. எப்படி என கேட்கிறீர்களா? தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள் -

  • White onion
  • 2 cups of Gatorade or any other energy drink
  • Screwdriver
  • iPod and USB cable
இது எல்லாவற்றையம் எடுத்த பின்னர் வீடியோவில் காட்டப்படுவது போன்று செய்து 30 நிமிடங்கள் வரை சார் செய்யுங்கள். வாழ்த்துக்கள்….



புதியஉலகம்
Read More

மூவர் மட்டுமே பேசும் அழிவின் விளிம்பிலுள்ள மொழியினை பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் _
by admin - 0

இந்தோனேஷியாவின் பபுவா தீவுப் பகுதியில் பேசப்பட்டு வரும் 'டஸ்னர்' எனப்படும் அழிவின் விளிம்பிலுள்ள மொழியொன்றினை பதிவு செய்து காப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். 

குறித்த மொழியானது தற்போது வெறும் 3 பேரால் மட்டுமே பேசப்பட்டு வருகின்றது.

இவர்கள் 60 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமாவர். கடந்த வருடமே 'டஸ்னர்' மொழி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தோனேஷியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் உள்ள மீன் பிடிக் கிராமத்தைச் சேர்ந்த 3 பேரே இம் மொழியை அறிந்தவர்களாவர். இதுவும் விசேட வைபங்களின் போதே உபயோகிக்கப்படுகின்றது.

'டஸ்னர்' மொழி அழிந்து போகும் சாத்தியங்கள் மிக அதிகமாக இருப்பதனால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அம்மொழியை பதிவுசெய்வதற்காக இப்பகுதிக்கு தற்போது விரைந்துள்ளனர்.

இம்மொழியைப் பேசி வந்த சிலர் அங்கு அடிக்கடி இடம்பெறும் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை பாதுகாப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் தற்போது தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்தோனேஷியாவில் 'மலாய்' மொழியின் பாவனை அதிகரித்ததைத் தொடர்ந்து அம்மொழிப் பாவனையாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 'டஸ்னர்' இனை கற்பிப்பதை நிறுத்தி விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இம் மொழியின் அழிவுக்கு இதுவும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

உலகின் 6000 மொழிகளில் 50 வீதமானவை இந்நூற்றாண்டில் மறைந்து போகுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 
Read More

உபுண்டு 11.04 ஐ இங்கே தரவிறக்கம் செய்யலாம்
by admin - 0

தகவல் தொழிநுட்ப நிறுவனமான கெனோனிகளின் தயாரிப்பான வேகமாக வளர்ந்து வரும் உபுண்டு இயக்குதளத்தின் புதிய தொகுப்பான ' உபுண்டு 11.04' (Ubuntu) தற்போது வெளியாகியுள்ளது.

உபுண்டு ஒரு திறந்த ஆணைமூல மென்பொருளாகும். அதாவது (Open source) ஆகும்.

கணினி உலகில் விண்டோஸ் இயக்குதளத்தின் ஆதிக்கமே காணப்படுகின்ற போதிலும் அதற்கு சரியான போட்டியளிக்க வல்லதாக உபுண்டு கருதப்படுகின்றது.

இப்புதிய தொகுப்பின் மூலம் பாவனையாளர்கள் முற்றிலும் புதியதொரு அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியுமென அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

இதனை பாவையாளர்கள் இம்முகவரில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். 




Read More

உள்ளங்கைகளில் வைரஸ்
by admin - 0

உங்கள் மொபைல் போனில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் போட்டிருக் கிறீர்களா? என்ற கேள்விக்குப் பெரும் பாலானவர்கள் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். பலர், அப்படி எல்லாம் மொபைல் போனுக்கும் உள்ளதா என்று கேட்பார்கள். பெர்சனல் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் கள் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் எல்லாம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு பாதுகாப்பான சூழ்நிலையில் இயங்கி வருகையில், கம்ப்யூட்டரின் அனைத்து பணிகளையும் தற்போது இயக்கி வரும் மொபைல் போன் இந்த வகை பாதுகாப்பினைப் பெறாமலேயே உள்ளது. 
இது குறித்து மெக் அபி நிறுவனத் துணைத் தலைவர் கூறுகையில், மொபைல் போன் வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்ச்சி இன்னும் மக்களிடையே பரவவில்லை. முன்பு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் பரவத் தொடங்கிய போது ஏற்பட்ட வைரஸ் சூழ்நிலை, மொபைல் போன்களுக்குத் தற்போது ஏற்பட்டு வருகிறது. இனி மக்கள் இதனை உணர்ந்து தற்காப்பு வழிகளை மேற்கொள்வார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். முன்பு வைரஸ் அனுப்பும் ஹேக்கர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்களை இலக்காகக் கொண்டு இயங்கினார்கள். இப்போது ஐ.பி. முகவரி பெறும் அனைத்து சாதனங்களையும் இலக்காக வைத்துள்ளனர். மொபைல் போன்கள் இன்டர்நெட் இணைப்பில் ஒரு சாதனமாகப் பரவலாக இயங்குவதால், மொபைல் போன்களும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. ஐ.பி. முகவரி கொண்ட மொபைல் போன்கள், பன்னா ட்டளவில் 600 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
மொபைல் போன்களைத் தாக்கும் வைரஸ்கள், போன்களில் பரவி, தகவல்களைத் திருடிப் பின்னர் அதிலிருந்து நீங்கி விடுகின்றன. வந்ததும் போனதும் பயன்படுத்துபவருக்குத் தெரியாது. நாளொன்றுக்கு 60 ஆயிரம் வைரஸ்கள் இவ்வாறு இயங்குவதாகத் தெரிகிறது. 
இந்த வைரஸ்களுக்கு அடித்தளம் பெரும்பாலும் டவுண்லோட் செய்யப் படும் புரோகிராம்களைக் கொண்ட இணைய தளங்களாக உள்ளன. அடுத்ததாக, மொபைல் போனுக்கான சாப்ட்வேர் புரோகிராம்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் இவற்றிற்கு வழி வகுக்கின்றன. அண்மையில் ஆண்ட்ராய்ட் மார்க்கட் சர்வரிலிருந்து நிறைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் வைரஸ் இருந்ததால் நீக்கப்பட்ட செய்தியை நாம் பார்த்தோம். இதிலிருந்து மொபைல் போனுக்கான புரோகிராம் ஒன்று, ஆண்ட்ராய்ட் மார்க்கட், ஓவி ஸ்டோர், ஐபோன் மார்க்கட்டில் இருப்பதனாலேயே அது வைரஸ் இல்லாதது என்று தெரிகிறது.
சைமான்டெக் நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், மூன்று லட்சத்து 10 ஆயிரம் தனிப்பட்ட தளங்கள், கெடுதல் விளைவிக்கும் தன்மை உடையனவாக உள்ளதாகக் கண்டறிந் துள்ளது. சராசரியாக, ஒரு மாத காலத்தில், 44 லட்சம் கெடுதல் விளைவிக்கும் தளங்கள் அறியப்பட்டுள்ளன. இணைய தளப் பக்கங்கள் அனைத்தும் நிலையான தகவல்களைத் தரும் பக்கங்களாக அமைக்கப்படுவதால், இவற்றில் வைரஸ்கள் சென்று இணைந்து தங்கள் கெடுதல் வேலையை மேற்கொள்வது எளிதாகிறது. 
இவற்றுடன் புளுஜாக்கிங் (Bluejacking) என்ற வகையில் தகவல் திருடும் கெடுதல் வேலையும் மேற்கொள்ளப்படுகிறது. புளுடூத் தொழில் நுட்பம் மூலம் அந்த வசதியை இயக்கி வைத்திருக்கும் மொபைல் போன்களுக்கு வைரஸ்களை, அந்த போனைப் பயன்படுத்துபவர்களின் அனுமதி இன்றி கெடுதல் விளைவிக்கும் வைரஸை அனுப்புவதே, புளுஜாக்கிங் எனப்படுகிறது. 
இதே போல Bluesnarfing என்று ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் வைரஸ்கள் புளுடூத் இணைப்பு மூலம் அனுப்பப்பட்டு, மொபைல் போனில் உள்ள தகவல்கள் அனைத்தும் மொத்தமாகத் திருடப் படுகின்றன. 
தற்போது பெருகி வரும் 3ஜி சேவை இந்த வைரஸ் பரவலுக்கு ஒரு காரணமாய் அமைந்து வருகிறது. 200 குழுக்களைச் சேர்ந்த, 2,200 மால்வேர் புரோகிராம்கள், இந்த சேவையின் மூலம் பரவுகின்றன. குறிப்பாக, நெட்வொர்க்குகள் இடையே இணைப்பு ஏற்படுகையில், இவை எளிதாகப் பரவுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. ரோமிங் மேற்கொள்கையில், மொபைல் போன்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் அறியப் பட்டுள்ளது.
Zeus Trojan என்ற ஒரு வைரஸ், பிளாக் பெரி மொபைல் போன்களை எளிதாகக் கைப்பற்றும் வகையில் உருவாக்கப் பட்டு பரவ விடப்பட்டது என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த வைரஸ் தன்னை உருவாக்கி அனுப்பிய ஹேக்கருக்கு, மொபைல் போன் பயன் படுத்துபவருக்குத் தெரியாமலேயே எஸ்.எம்.எஸ். அனுப்பும் திறன் கொண்டது. வரும் அழைப்புகளைத் தடை செய்திடும்; புதிய அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றினை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது.
பல வைரஸ் எதிர்ப்பு மற்றும் மொபைல் பாதுகாப்பு புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த வகையில் ஒரு நல்ல சாப்ட்வேர் புரோகிராம், போன்களை கெடுதல் விளைவிக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, மொபைல் போன் திருடப்பட்டு அல்லது காணாமல் போகும் வேளைகளில், அந்த போனை ரிமோட் மூலம் செயல் இழக்கச் செய்திடும் வசதியைத் தருகின்றன. இதே வழியில், மொபைல் போனில் உள்ள அனைத்து பெர்சனல் தகவல்களையும் அழிக்கவும் வழி தரப்படுகிறது.
சில குறிப்பிட்ட மொபைல் போன் வைரஸ்களை இங்கு பார்க்கலாம்.
1. Android/Geinimi: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், வர்த்தக ரீதியான மொபைல் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் போன்ற கேம்ஸ்களில் நுழைந்தே இந்த ட்ரோஜன் வைரஸ் வருகிறது. 
2. SymOS/XMJTC: இது ஒரு குழுவான வைரஸ். புரோகிராம் டெவலப்பர்கள் நம்மிடம் அனுமதி பெறும் சான்றிதழ் போன்ற போர்வையில் போன்களுக் குள்ளே நுழைகின்றன. இவை எங்கு தகவல்களை அனுப்புகின்றன என்பதைக் கண்டறியும் வழிகளை அண்மையில் சில ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. 
3. Mobspy.A: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தைக் குறி வைத்துப் பாதித்து, இயங்கும் வைரஸ். மொபைல் போனுக்கு வரும் மற்றும் அழைக்கும் எண்களைப் பதிவு செய்கிறது. எஸ்.எம்.எஸ். செய்தி களையும் குறித்து வைக்கிறது. போன் பயன்படுத்துபவர் வாழும் இடத்தையும் ஜி.பி.எஸ். மூலம் அறிகிறது. இவ்வாறு திருடப்பட்ட தகவல்கள் அனைத்தையும், சர்வர் ஒன்றுக்கு அனுப்புகிறது. இந்த திருட்டு தகவல்களை ஹேக்கர் எப்போது வேண்டுமானாலும், தன் நோக்கங் களுக்குப் பயன்படுத்த முடியும்.
4. CommWarrior: பெரும்பாலான நோக்கியா போன்களில் பயன்படுத்தப் படும் சிம்பியன் சிஸ்டத்தில் இந்த வைரஸ் பரவுகிறது. பரவிய போனில் உள்ள அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளுக்கு எம்.எம்.எஸ்.வகை செய்திகளை அனுப்புகிறது இந்த வைரஸ். அழைப்பு பதிவுகளையும், எஸ்.எம்.எஸ். செய்திகளையும் பதிவு செய்து, ஹேக்கருக்கு அனுப்புகிறது.
Read More

April 29, 2011

தேவையில்லாத பைல்களை ஒரே நிமிடத்தில் அடித்து விரட்டும் CCleaner - V3.06
by admin - 0



நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். உலகளவில் கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.இது  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். 
பயன்கள்: 
  • இந்த மேம்படுத்தப்பட்ட பதிவில் HTML5 பைல்களுக்கேன்றே பிரத்யோகமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த மென்பொருள் குரோம்,பயர்பாக்ஸ், IE மட்டுமின்றி தற்போது OPera மற்றும் சபாரி ஆகிய பிரவுசர்கள் மூலம் நம் கணினியில் உருவாகும் தேவையில்லாத பைல்களையும் முற்றிலுமாக நீக்குகிறது.
  • க்ரோமில் அதிக முறை பார்க்கப்பட URL களை நீக்குகிறது.
  • ஒபேரா உலவியில் கடைசியாக பார்த்த URL களை நீக்கு கிறது.
  • இந்த மென்பொருள் தேவையில்லாத பைல்களை நீக்கி விடுவதால் நம் கணினியில் அதிக காலி இடம் உருவாகும்.
  • புதிய பதிப்பு 64-bit கணினிகளும் உபயோகிக்கும் வரையில் வடிவமைக்க பட்டுள்ளது.
  • இன்னும் பல பயனுள்ள வசதிகள் இந்த மென்பொருளில் மேம்படுத்தப்பட்டுள்ளது
Read More

நெல்லில் செம்பேன் ஒருங்கிணைந்த கட்டுப்பா
by admin - 0




பல்வேறு ரக நெற்பயிர்களில் செம்பேன் தாக்குதல் அதிகம் தென்பட்டு வருகிறது. இச்செம்பேன்கள் கண்களுக்கு தெளிவாகப் புலப்படாது. அதாவது ஒரு மி.மீ. அளவிற்கும் சிறியவை. சாதாரண கை உருப்பெருக்கிகள் கொண்டுதான் நன்றாக பார்க்க முடியும்.
எட்டுக்கால்களைக் கொண்ட சிலந்திவகையைச் சேர்ந்த இந்த நுண்ணிய செம்பேன்கள் நெற்பயிரில் இலைகளின் அடிப்புறத்தில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் மேற்பரப்பில் பழுப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும் மெல்லிய வரிகளும் ஏற்பட்டு நாளடைவில் இலைகள் வெளிறி கருகிவிடும். அதிக எண்ணிக்கையில் பெருகும்போது இலையின் மேற்பரப்பிற்கும் வந்து சாற்றை உறிஞ்சி மிகுந்த அளவில் சேதம் ஏற்படுத்துகிறது. நாற்றங்கால்களிலும் நடவு வயலிலும் இதன் பாதிப்பால் 25 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வெப்பமான மழைக் காலத்தை ஒட்டி இதன் தாக்குதல் அதிகம் தென்படும்.
தாய்ச்செம்பேன்கள் தனித்தனி முட்டைகளை இலைகளின் நடுநரம்புகளை ஒட்டி இருபுறங்களிலும் இடுகின்றன. மென்மையான பட்டு இழைகள் போல் வலைகள் பின்னி 200 முட்டைகள் வரை இடுகின்றன. குஞ்சுகள் 6 கால்களுடன் இளம்பழுப்பு நிறத்திலும் முதிர்ந்த செம்பேன்கள் 8 கால்களுடன் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் காணப்படும். தாய்செம்பேன்கள் 21 நாட்கள் வரை உயிர்வாழும். உடம்பின் இரு ஓரங்களிலும் சிறு கருப்பு புள்ளிகளுடன் காணப்படும்.
வயற்பரப்பில் அதிகமான ஈரப்பதமும் வெப்பமும் இருத்தல், நெருக்கமான நடவு, போதுமான காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் இல்லாதது, களைகள் மண்டிக் கிடப்பது, தேவையில்லாமலும் தேவைக்கு அதிகமாகவும் விஷப்பூச்சி மருந்துகளைத் தெளித்து இயற்கை எதிரிகளை அழிப்பது போன்றவை இந்த நெற்செம்பேன்களின் அதிவேகமான இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணங்களாகும். எனவே இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இவற்றுடன் கீழக்காணும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளையும் கடைபிடித்து சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.
மேலாண்மை முறைகள்: தி சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற பூஞ்சாணத்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் செம்பேன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
* வயலில் களைகளை அகற்ற வேண்டும்.
* செம்பேன்கள் பாதித்த பாகங்களை சேகரித்து அழித்தல் வேண்டும். 
* எதிர்ப்புத்திறன் உள்ள நெல் ரகங்களைக் கண்டறிந்து பயிர்செய்ய வேண்டும்.
* தழைச்சத்து அதிகம் இடுவதைத் தவிர்க்கவும்.
* தழைச்சத்தை யூரியா வடிவில் வேப்பம் புண்ணாக்குடன் 5:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும். 
* தொடர்ந்து நெல் சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
* செம்மை நெல் சாகுபடி முறைகளைப் பின்பற்றும்போது பொதுவாக செம்பேன் மற்றும் இதர பூச்சிகளின் தாக்குதல் மிகக்குறைவாக உள்ளது.
* செம்பேன்களின் எண்ணிக்கை இலைக்கு 10 என்று மிகும்பொழுது நனையும் கந்தகம் 
80 சதம் @ 6.25 கிராம்/ லி, புரபெனோபாஸ் @ 2மிலி/லி, ஸ்பைரோமெசிபென் @ 0.75 மிலி/லி அல்லது 3 சத வேப்பெண்ணெய் கரைசல், 5 சதம் வேப்பம் பருப்புச்சாறு போன்றவற்றைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
* பூச்சி மருந்து தெளிக்கும்போது தவறாது ஒட்டும் திரவம் 0.5 மிலி/லி என்ற அளவில் சேர்க்க வேண்டும்.
Read More

நெல்லில் செம்பேன் ஒருங்கிணைந்த கட்டுப்பா
by admin - 0

பல்வேறு ரக நெற்பயிர்களில் செம்பேன் தாக்குதல் அதிகம் தென்பட்டு வருகிறது. இச்செம்பேன்கள் கண்களுக்கு தெளிவாகப் புலப்படாது. அதாவது ஒரு மி.மீ. அளவிற்கும் சிறியவை. சாதாரண கை உருப்பெருக்கிகள் கொண்டுதான் நன்றாக பார்க்க முடியும்.
எட்டுக்கால்களைக் கொண்ட சிலந்திவகையைச் சேர்ந்த இந்த நுண்ணிய செம்பேன்கள் நெற்பயிரில் இலைகளின் அடிப்புறத்தில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் மேற்பரப்பில் பழுப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும் மெல்லிய வரிகளும் ஏற்பட்டு நாளடைவில் இலைகள் வெளிறி கருகிவிடும். அதிக எண்ணிக்கையில் பெருகும்போது இலையின் மேற்பரப்பிற்கும் வந்து சாற்றை உறிஞ்சி மிகுந்த அளவில் சேதம் ஏற்படுத்துகிறது. நாற்றங்கால்களிலும் நடவு வயலிலும் இதன் பாதிப்பால் 25 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வெப்பமான மழைக் காலத்தை ஒட்டி இதன் தாக்குதல் அதிகம் தென்படும்.
தாய்ச்செம்பேன்கள் தனித்தனி முட்டைகளை இலைகளின் நடுநரம்புகளை ஒட்டி இருபுறங்களிலும் இடுகின்றன. மென்மையான பட்டு இழைகள் போல் வலைகள் பின்னி 200 முட்டைகள் வரை இடுகின்றன. குஞ்சுகள் 6 கால்களுடன் இளம்பழுப்பு நிறத்திலும் முதிர்ந்த செம்பேன்கள் 8 கால்களுடன் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் காணப்படும். தாய்செம்பேன்கள் 21 நாட்கள் வரை உயிர்வாழும். உடம்பின் இரு ஓரங்களிலும் சிறு கருப்பு புள்ளிகளுடன் காணப்படும்.
வயற்பரப்பில் அதிகமான ஈரப்பதமும் வெப்பமும் இருத்தல், நெருக்கமான நடவு, போதுமான காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் இல்லாதது, களைகள் மண்டிக் கிடப்பது, தேவையில்லாமலும் தேவைக்கு அதிகமாகவும் விஷப்பூச்சி மருந்துகளைத் தெளித்து இயற்கை எதிரிகளை அழிப்பது போன்றவை இந்த நெற்செம்பேன்களின் அதிவேகமான இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணங்களாகும். எனவே இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இவற்றுடன் கீழக்காணும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளையும் கடைபிடித்து சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.
மேலாண்மை முறைகள்: தி சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற பூஞ்சாணத்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் செம்பேன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
* வயலில் களைகளை அகற்ற வேண்டும்.
* செம்பேன்கள் பாதித்த பாகங்களை சேகரித்து அழித்தல் வேண்டும். 
* எதிர்ப்புத்திறன் உள்ள நெல் ரகங்களைக் கண்டறிந்து பயிர்செய்ய வேண்டும்.
* தழைச்சத்து அதிகம் இடுவதைத் தவிர்க்கவும்.
* தழைச்சத்தை யூரியா வடிவில் வேப்பம் புண்ணாக்குடன் 5:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும். 
* தொடர்ந்து நெல் சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
* செம்மை நெல் சாகுபடி முறைகளைப் பின்பற்றும்போது பொதுவாக செம்பேன் மற்றும் இதர பூச்சிகளின் தாக்குதல் மிகக்குறைவாக உள்ளது.
* செம்பேன்களின் எண்ணிக்கை இலைக்கு 10 என்று மிகும்பொழுது நனையும் கந்தகம் 
80 சதம் @ 6.25 கிராம்/ லி, புரபெனோபாஸ் @ 2மிலி/லி, ஸ்பைரோமெசிபென் @ 0.75 மிலி/லி அல்லது 3 சத வேப்பெண்ணெய் கரைசல், 5 சதம் வேப்பம் பருப்புச்சாறு போன்றவற்றைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
* பூச்சி மருந்து தெளிக்கும்போது தவறாது ஒட்டும் திரவம் 0.5 மிலி/லி என்ற அளவில் சேர்க்க வேண்டும்.
Read More

ரஜினிக்கு திடீர் மூச்சுத் திணறல்:ஆஸ்பத்திரியில் அனுமதி
by admin - 0

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ராணா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது.
 
படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில காட்சிகளில் நடித்தார். அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. படபிடிப்பு குழுவினர் அவரை உடனடியாக மயிலாப்பூரிலுள்ள இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
 
அவருக்கு டாக்டர். கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இதையறிந்ததும் ரசிகர்கள் இசபெல்லா மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
மருத்துவமனையில் அவரது மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா உள்பட அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்
Read More