Latest News

February 14, 2011

பத்து ஆண்டுகளில் பயமுறுத்தியவை
by admin - 0

2011 ஆம் ஆண்டுடன் அடுத்த பத்தாவது ஆண்டிற்குள் நுழைந்திருக்கிறோம். தகவல் தொழில் நுட்பத்தில், நாம் கடந்த பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்த்தால், சாதனைகளுடன், சந்தித்த சோதனைகளும் அதிகமாவே இருந்துள்ளன. அந்த சோதனைகளில் நம்மை அதிகம் பயமுறுத்திய சில விஷயங்களை இங்கு காணலாம். வரும் காலங்களில் இது போன்ற இடர்ப்பாடுகள் வருகையில், சமாளிக்கும் திறனை இது அளிக்கும்.
1. ஒய் 2 கே (Y2K): 2000 ஆண்டு தொடங்கும் போது, அனைத்து கம்ப்யூட்டர் களிலும் பிரச்னை ஏற்பட்டு விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆண்டினை கம்ப்யூட்டர் இரண்டு இலக்கங்களிலேயே ஸ்டோர் செய்து வந்தது. அதனால் 99க்குப் பின் 00 என்று வந்தால், அதனால் தர்க்க ரீதியாக தவறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அனைத்து இயக்கங் களும் கம்ப்யூட்டர் அடிப்படையில் இருப்பதனால், உலக இயக்கமே ஒரு முடிவிற்கு வந்துவிடுமோ என்று அனைவரும் பயந்தனர். 1984 ஆம் ஆண்டிலேயே, இது குறித்த எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டதால், பலர் முனைந்து இதனைச் சரி செய்தனர்.
2.கான்பிக்கர் வோர்ம் (Conficker Worm): 2008 ஆம் ஆண்டில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களைக் குறி வைத்து தாக்கியது. 2008-09 ஆம் ஆண்டு வாக்கில் இது குறித்து அதிகமாகப் பேசப்பட்டது. ஏறத்தாழ ஒரு கோடி தனிநபர், நிறுவன மற்றும் அரசு கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. இதனை உருவாக்கி அனுப்பியவர், இதன் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களைக் கட்டுப்படுத்த முடிந்தது. இது Downup, Downadup, and Kido எனவும் அழைக்கப்பட்டது. இதனை உருவாக்கி பரப்பியவர்கள் குறித்து உறுதியான தகவல் தருபவர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் தரப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித் திருந்தது. இன்று வரை அவர்கள் சிக்கவில்லை.
3. மைடூம் (Mydoom): 2004–09ஆம் ஆண்டு களில் பரப்பப்பட்டு, அதிவேகமாக இமெயில் வழி பரவிய வைரஸ் என்று பெயர் பெற்றது. இதனைப் பரப்பி யவர்களையும் கண்டறிய முடியவில்லை. ஆனால் ரஷ்யாவிலிருந்து வந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.
4. ஐ லவ் யு வைரஸ் (I Love You): ஆண்டு 2000. 5 கோடிக்கும் மேலான கம்ப்யூட்டர் களைப் பாதித்தது. “LOVELETTERFORYOU.TXT.vbs,” என்ற இணைப்பு மூலம் இது பரவியது. 550 கோடி டாலர் மதிப்பில் இதன் சேதம் மதிப்பிடப்பட்டது.
இவற்றுடன் இன்னும் பல வைரஸ்களும் நம்மைப் பயமுறுத்தின. ஆனால் விரைவில் அவை கண்டறியப் பட்டு, குறைந்த அளவினாலான சேதத்துடன் நிறுத்தப்பட்டன.
ஆனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த வகை சிக்கல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

Read More

எக்ஸெல் வரிசைப்படுத்துதல்
by admin - 0

எக்ஸெல் ஒர்க்புக்கில் டேட்டாவினை அமைத்த பின்னர், செல்களில் உள்ள டேட்டாவினை வரிசைப்படுத்தலாம். அதிக மதிப்பிலிருந்தோ, அல்லது குறைந்த மதிப்பிலிருந்தோ, நம் விருப்பப் படி வரிசைப்படுத்தி வகைப்படுத்தலாம். இதற்கு இத்தொகுப்பில் உள்ள Sort கட்டளையை எளிதாகப் பயன்படுத்து கிறோம். ஆனால் அனைத்து டேட்டாவும் வரிசைப்படுத்தும் செயலுக்கு உட்படாது. எடுத்துக் காட்டாக, வார நாட்களை (Sunday, Monday, Tuesday etc.) எப்படி வரிசைப்படுத்துவது? வரிசைப்படுத்தினால், Friday, Monday, Saturday, Sunday, Thursday, Tuesday, Wednesday என்றல்லவா அமையும். இதே போல மாதங்களின் பெயர்களை (January, February,March etc.) வரிசைப்படுத் தினால், நமக்கு ஜனவரி, பிப்ரவரி என்று கிடைக்காது. அப்படியானால் இவற்றை எப்படித்தான் வரிசைப்படுத்துவது. இங்குதான் நமக்கு உதவ custom sort என்ற வழி தரப்பட்டுள்ளது.
மாதங்களின் பெயர்களை A2 என்ற செல் முதல் A13 செல் வரை என்டர் செய்திருக்கிறீர்கள். இவற்றை சரியான வரிசையில் அமைக்க, முதலில் இந்த செல்களைத் தேர்ந்தெடுங்கள். அதாவது A2:A13. அடுத்து Data மெனுவிலிருந்து Sort என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன், Sort டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Sort By கட்டளை மாதங்களை அகராதி வரிசைப்படி காட்டும். இதனைத் தவிர்க்க, டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள, Options பட்டனைக் கிளிக் செய்திடவும்.
இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், First Key Sort Order கண்ட்ரோல் Month எனக் காட்டும். இப்போது, கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியை அழுத்தவும். இங்கு custom sort ஆப்ஷன்ஸ் தரப்படும். இதில், கடைசியாக உள்ள January, February, March என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக் கவும். இதில் நாம் சிறிய மற்றும் பெரிய எழுத்துக்களில் மாதப் பெயர்களை அமைத்திருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. இருப்பினும், நீங்கள் விருப்பப்பட்டால், பெரிய, சிறிய எழுத்துப்படியும் வகைப்படுத்தலாம். இதற்கும் ஓர் ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. மேலே கூறியபடி, ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், இருமுறை ஓகே, கிளிக் செய்து வெளியேறவும். எக்ஸெல் நீங்கள் விரும்பியபடி, மாதங்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் காட்டும்.
எக்ஸெல் 2007 மற்றும் எக்ஸெல் 2010 தொகுப்புகளும் இந்த வசதிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் சிறிய அளவில் சற்று மாறுதலாக இதனைக் கையாள வேண்டும்.
முதலில் Sort & Filter குரூப்பில் Sort ஆப்ஷனைக் கிளிக் செய்திடவும். இதில் A to Z அல்லது Z to A ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.
இப்போது கிடைக்கும் Sort டயலாக் பாக்ஸில் Order control பட்டியலைத் திறக்கவும். இப்போது நீங்கள் விரும்பும் வகையிலான, custom sort ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். ஆப்ஷனைப் பயன்படுத்துகையில், அந்த பட்டியலில் அனைத்து டேட்டாவும் இருக்க வேண்டும் என்பதில்லை. எடுத்துக்காட்டாக, டேட்டாவில் வாரத்தின் ஏழு நாட்களும் அல்லது மாதத்தின் 12 பெயர்களும் அமைக்கப் பட்டிருக்கத் தேவையில்லை. இருக்கின்ற நாட்களின் பெயர்களை அல்லது மாதங்களின் பெயர்களை, நாம் தேர்ந்தெடுத்த ஆப்ஷன்படி வரிசைப் படுத்தித் தரும்.
எடிட்டிங் ரத்து செய்திட
ஒர்க்புக் ஒன்றில் செல்களில் சில தகவல்களை நிரப்பிக் கொண்டிருக்கை யில், அடடா, இது வேறு செல் ஆயிற்றே, வெட்டியாக இதில் டேட்டாவினை நிரப்பிவிட்டோமே என்று கவலைப் படுகிறீர்களா? உடனே, டேட்டா முழுவதையும் அதிலிருந்து நீக்கி ரத்து செய்திட வேண்டும் என எண்ணுகிறீர்களா?
இதற்கு இரு வழிகள் உள்ளன. முதல் வழி, எஸ்கேப் (Esc) கீயை அழுத்துவது. அடுத்ததாக பார்முலா பாரில் இடது பக்கம் உள்ள சிகப்பு எக்ஸில் (X) கிளிக் செய்வது. எதனை மேற்கொண்டாலும், எக்ஸெல் உங்கள் எண்ணத்தினைப் புரிந்து கொண்டு, இடப்பட்ட டேட்டாவினை நீக்கி, நீங்கள் அதில் டைப் செய்திடும் முன் செல் எப்படி இருந்ததோ, அந்த நிலைக்குக் கொண்டு வருகிறது.
ஆனால், நீங்கள் ஒரு தவறு செய்து, என்டர் அழுத்துவதாக வைத்துக் கொள்வோம். உடனே எக்ஸெல் நீங்கள் என்னவெல்லாம் டைப் செய்தீர்களோ, அவற்றுடன் அந்த செல்லை அமைக்கிறது. இதனை ரத்து செய்திட, எக்ஸெல் தொகுப்பு தரும் ரத்து (Undo) வசதியைப் பயன்படுத்த வேண்டும். டூல்பாரில் கிளிக் செய்திட வேண்டும்; அல்லது Ctrl+Z கீகளை ஒருசேர அழுத்த வேண்டும்.
எக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ
எக்ஸெல் தொகுப்பில் பணியாற்று கையில் என்டர் கீயை அழுத்தினால் அது கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும். ஆனால் என்டர் கீ அழுத்தி அதே செல்லில் நீங்கள் தகவல்களை அமைக்க வேண்டும் என விரும்பினால் என்ன செய்யலாம்? அல்லது அடுத்த இணையான செல்லுக்குச் செல்ல வேண்டும் படி என்டர் கீ அழுத்துவதனை அமைக்க விரும்பினால் என்ன செய்யலாம்? Tools | Options | Edit என வரிசையாகச் சென்று அதில் Move selection after Enter என்று இருக்கும் இடத்தில் உங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் அமைத்துக் கொள்ளலாம்.
Read More

February 11, 2011

வேர்ட் தொகுப்பில் சில சுருக்கு வழிகள்
by admin - 0

Alt + F10 விண்டோவினை அதன் முழு அளவிற்கு மாற்றுகிறது
Alt + F5 விண்டோவினை பழைய வழக்கமான நிலைக்குக் கொண்டு வரும்.
Ctrl + Shift + A தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதையும் கேப்பிடல் எழுத்துக்களாக மாற்றுகிறது. இதனை Shift+F3 என்ற கீகளூம் மேற்கொள்ளும்.
Shift + F2 தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லாமல் காப்பி செய்கிறது. காப்பி செய்ததனை பேஸ்ட் செய்திட என்டர் அழுத்தினால் போதும்.
Ctrl+ Backspace பின்புறமாக ஒரு சொல்லை அழித்திடும். ஆனால் இது காப்பி செய்யப்பட மாட்டாது.
Ctrl+W, Ctrl+F4 இந்த இரண்டு கீ இணைப்புகளும் அப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் பைலை சேவ் செய்திடவா என்று ஒரு டயலாக் பாக்ஸ் மூலம் கேட்டுவிட்டு பின் அழுத்தும் கட்டத்திற்கேற்றபடி பைலை மூடும்.
Alt + Ctrl + S பணியாற்றிக் கொண்டிருக்கும் விண்டோவினை படுக்கை வாக்கில் பிரிக்கும் கோடு கிடைக்கும். பின் அந்த கோட்டினை நகர்த்தி விண்டோவைப் பிரித்துப் பயன்படுத்தலாம்.
Ctrl + Shift + D தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் கீழாக இரு கோடுகள் இடப்படும். இதனை நீக்குவதற்கு மீண்டும் இதே கீகளைப் பயன்படுத்தலாம்.
F5 அல்லது Ctrl+G செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆவணத்தில் குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.
Ctrl+H ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டைக் கண்டுபிடித்து அதற்குப் பதிலாக நாம் தேர்ந்தெடுக்கும் அல்லது அமைக்கும் டெக்ஸ்ட்டை ஒட்டும்.
Ctrl+F2 அனைத்து பக்கங்களின் அச்சு தோற்றத்தைக் காட்டும்.
Alt F, I பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆவணத்தின் பிராபர்ட்டீஸ் பார்க்க இந்த கீகளை வரிசையாக அழுத்தவும்.
Shift + F5 ஆவணத்தில் முன்பு டெக்ஸ்ட்டை செருகிய இடத்திற்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லும். இது போல மூன்று முந்தைய இடத்திற்கு எடுத்துச் செல்லும். அதன்பின் மீண்டும் பழைய இடத்திற்கு வந்துவிடும். இது மிகவும் பயனுள்ள ஒரு ஷார்ட் கட். இதனால் ஒரு ஆவணத்தைத் திறந்திடுகையில் அதனை முன்பு பயன்படுத்துகையில் எந்த இடத்தில் எடிட் செய்து கொண்டிருந்தீர்களோ அந்த இடத்திற்கு இந்த கீகளைப் பயன்படுத்திச் சென்று விடலாம்.
Read More

பிளாப்பி, சிடி என்பதையெல்லாம் விட்டுவிட்டு பிளாஷ் ட்ரைவிற்கு மாறியவரா நீங்கள்?
by admin - 0

உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம். ஆனால் நாள் ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ் ட்ரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம். ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது. எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் பிளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும்.
கவலைப் படாதீர்கள். பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்.
Read More