Latest News

October 30, 2010

பூமியை பாயாக சுருட்டிய அசுரன் அழிந்த நாளே தீபாவளி -அது தமிழர் விழாவா? புறக்கணியுங்கள் கொண்டாடுபவர்கள் படு முட்டாள்கள்
by admin - 0

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள்.


என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.


“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள். அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை – விரதம், நோன்பு – உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள். இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!


எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!


இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்? நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் – பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்? தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது) 1.


ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்


. 2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.


3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.


4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள். 9.
இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!


இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?


பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.


இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும்


, நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.


-தந்தை பெரியார்
Read More

் மழலை மொழி இறுவட்டு உறை
by admin - 0

Read More

October 29, 2010

யாழ் பல்கலை விவசாய பீட இறுதி வருட மாணவர்களின் மழலை மொழி குறும் படத்தின் trailer
by admin - 0



யாழ் பல்கலை விவசாய பீட இறுதி வருட 18 ஆம் அணி மாணவர்களினால் முதல் முதலில் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளிவர இருக்கும் மழலை மொழி குறும் திரைபடத்தின் இசை வெளியிட்டு விழாவும் அத்துடன் அதன் trailer ம் இன்று( 29 .10 .2010) விவசாய பீட பிரதான மண்டபத்தில் 18 ஆம் அணி மாணவர்களினால் வெளியிடப்பட்டது
Read More

October 28, 2010

வைக்கோலில் எரிபொருள் தயாரிப்பு பேராதனைப் பல்கலையில் சாதனை
by admin - 0

வைக்கோலைப் பயன்படுத்தி பெற்றோலுக்குச் சமமான ""பியூட்ட போல்'' எனும் எரிபொருளைத் தயாரிக்கும் முயற்சியில் பேராதனை பல்கலைக்கழக விவசாய உயிரியல் விஞ்ஞானபீடத்தின் விரிவுரையாளர் கள் குழு வெற்றி கண்டுள்ளது.
பெற்றோலில் இயங்கும் வாகனங்களில் எவ்வித தொழில்நுட்ப மாற்றமும் இன்றி இந்தப் புதிய எரிபொருளை நிரப்பி அவற்றை இயங்க வைக்க முடியும் என இக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு கிலோ வைக்கோலில் இருந்து ஒரு லீற்றர் பியூட்ட போலைத் தயாரிக்க முடியும் என்றும், அதற்கான உற்பத்திச் செலவு 28 ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய உயிரியல் விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் சரத் பண்டார, கலாநிதி சாலிய சில்வா, ஆராய்ச்சியாளர் பிரியந்த விஜேரத்ன ஆகியோர் அடங்கிய குழுவே இச்சாதனையைப் புரிந்துள்ளது.
இது தொடர்பில் பிரியந்த விஜேரத்ன தெரிவித்தவை வருமாறு:
இலங்கையில் வருடாந்தம் பல்லாயிரம் தொன் வைக்கோல் மிஞ்சுகின் றது. எனவே, உள்நாட்டில் பியூட்டபோலை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் தாராளமாக இருக்கிறது.
இதற்கென விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ வைக்கோலை பத்து ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ளும் திட்டமும் உள்ளது இவ்வாறு பிரியந்த தெரிவித்தார்.
Read More

October 21, 2010

பச்சைக் காய்த் துளைப்பான் :ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா அறிகுறிகள்
by admin - 0

ஆரம்ப நிலைகளில் இலைகள் உதிரும்
காயின் உள்ளே புழுக்கள் தலையை மட்டும் உள்ளே விட்டு, உடலை வெளிப்பக்கம் வைத்திருக்கும்
காயைச் சுற்றி வட்டவடிவ துளைகள் இருக்கும்

Cowpea
காயை உண்ணும் புழுக்கள்
Cowpea
சேதமடைந்த காய்
பூச்சியின் விபரம்:
முட்டைகள் : வட்டவடிவில், பால் வெள்ளை நிறத்தில், தனித்தனியாக காணப்படும்.
புழுக்கள் : பச்சை நிறத்திலிருந்து பழப்பு நிறம் வரை மாறி மாறித் தோன்றும். பச்சை கலந்த சுடர் பழுப்பு நிற வரிகள் உடலின் பக்கவாட்டில் இருக்கும். வெள்ளை நிற வரிகளுடன் சுடர் மற்றும் மங்கிய நிற வளையங்களுடன் காணப்படும்

கூட்டுப்புழு : பழுப்புநிறத்தில், மண் இலை, காய் பயிர்க் குப்பைகளில் காணப்படும்
தாய்ப்பூச்சி : மங்கிய பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து இருக்கும். முன்னிறக்கைகள் சாம்பல் நிறத்திலிருந்து மங்கிய பழுப்பு நிறம் வளர ‘வி’ வடிவ குறியுடன் காணப்படும்
பின்னிறைக்கைகள் மங்கிய வெள்ளை நிறத்துடன் அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்
கட்டுப்பாடு

  • இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும்.
  • எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும்.
  • வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
  • பச்சைக் காய்ப்புழு நச்சுயிரியை எக்டருக்கு 1.5 X 10 12 கிருமிகள் மற்றும் ஒட்டும் திரவம் 1.0 மி லி / லி. என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும்.

கீழ்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு எக்டருக்கு 625 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் / தூவவும்

  • டைகுளோர்வாஸ் 625 மி.லி
  • எண்டோசல்பான் 4 சதத்தூள் 25 கி.கி
  • குயினால்பாஸ் 4 சதத்தூள் 25 கி.கி
  • கார்பரில் 5 சதத்தூள் 25 கி.கி
  • எண்டோசல்பான் 35 இ . சி 1.25 லி
  • மானோகுரோட்டாபாஸ் 36 எஸ். எல் 625 மிலி
  • டிரைஅசோபாஸ் 750 மி லி சதம் தெளித்தபின் வேப்பங்கொட்டைச்சாறு கரைசல் 31.0 லி / எக்டர் இரண்டு முறை தெளிக்கவும்.
  • பாசலோன் 35 இ.சி 1.25 லி

(குறிப்பு: புழுக்களின் மூன்றாம் பருவநிலைகள் வரை மட்டுமே பூச்சிக் கொல்லிகள் பச்சைக் காய்ப்புழு நச்சுயிரி தெளிக்கவும்.)


Read More

October 19, 2010

பொன்னீம்’ பூச்சிக்கொல்லியின் பொன்னான வாழ்வு
by admin - 0




தயாரிப்பது சுலபம்:


இந்த பொன்னீம் தயாரிப்பு மிகமிக எளிதானதாகவே இருக்கிறது. வேப்ப எண்ணெய் 45%, புங்கன் எண்ணெய் 45%, சோப்புக் கரைசல் (ஒட்டும் திரவம்) 10% ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, நன்கு கலக்கினால் உடனடியாக பொன்னீம் தாயர்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பொன்னீம் என்கிற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும். 10 லிட்டர் கொள்ளளவுள்ள தெளிப்பானில் முதலில் 300 மில்லி பொன்னீமை ஊற்றிவிட்டு பிறகு 10 லிட்டர் தண்ணீரை ஊற்றவேண்டும். இப்படி செய்தால் பொன்னீம் மருந்து தண்ணீரில் நன்றாக கலந்துவிடும் மிண்டும் ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வைத்து கலக்கி, அதன் பிறகு கூட தெளிப்பானில் ஊற்றிக் கொள்ளலாம்.

ஒரு ஏக்கருக்கு ஒன்றறை லிட்டர் வரை தேவைப்படும்.
பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்:

அசுவினி:

இளம் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும்.

காய்த் துளைப்பான்:

தக்காளி, கத்திரி, வெண்டை மற்றும் மிளகாய்ச் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும்.

படைப்புமு:

இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப் புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்தது போல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கிவிடும்.
நெல் தத்துப்பூச்சி, நெல் தண்டு துளைப்பான் ஆகியவற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.
Read More

October 16, 2010

லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்
by admin - 0

அரிசி அலம்பிய கழுநீரை மூடியுடன் கூடிய ஒரு பாத்திரத்தில் பாதி அளவுக்கு நிரப்பி காற்று பத்திரத்திற்குள் போய் வருமாறு லேசாக மூடி வைக்க வேண்டும். அறையின் வெப்பநிலை இருபது முதல் இருபத்தைந்து டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். ஏழு நாட்களில் இந்த நீர் புளித்து அதில் இருந்த உமி பிரிந்த மேற்பரப்பில் ஆடை போல படர்ந்து இருக்கும். அதை ஒரு வடிகட்டி மூலம் அகற்றி விட வேண்டும். வடித்து வைத்திருக்கும் புளித்த நீரில் அதைப்போல பத்து மடங்கு பாலை சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும். அடுத்த ஏழு நாட்களில் இந்தக் கலவையில் மாவு, புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் தனியாக பிரிந்து மேலே ஆடை போல மிதக்கும். கெட்டு தட்டி போன மாவு, புரதம் மற்றும் கொழுப்பு பொருட்களை நீக்கினால் மஞ்சள் வண்ணத்தில் ஒரு திரவம் கிடைக்கும். இந்த திரவத்தில் அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தை கலந்து மூடி வைக்கவும். இந்த கலவை சாதரணமாக நிலவும் அறை வெப்பத்திலேயே கெட்டு போகாமலிருக்கும். இதுதான் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்


நூறு மில்லி ரசத்தை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். நாட்டு பசுமாட்டு பால் சிறந்த பலனை தரும். குளோரின் தண்ணீர் உபயோகிக்கக்கூடாது.


இக்கலவை மிகச்சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும்.
Read More

October 14, 2010

பிரம்மாஸ்திரம்
by admin - 0

புளியம் இலை 2 கிலோ
நொச்சி இலை 10 கிலோ
வேப்பம் இலை 3 கிலோ


இவற்றை 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து அக்னி அஸ்திரம் தயாரிப்பது போல் மண்பானையில் தயாரிக்க வேண்டும். 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1 ஏக்கருக்கு தெளிக்கலாம்.

மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம். அசுவனி போன்ற பூச்சிகள் அண்டாது
Read More

பயங்கரமானது தயவு செய்து பார்க்க வேண்டாம்
by admin - 0

பயங்கரமானது தயவு செய்து பார்க்க வேண்டாம் தலை இரண்டாக பிளந்த பயங்கரம்
Read More

வேம்பு புங்கன் கரைசல்
by admin - 0

தேவையான பொருட்கள் :-


வேப்பெண்ணை ஒரு லிட்டர்

புங்கன் எண்ணை ஒரு லிட்டர்
கோமியம் (பழையது) பத்து லிட்டர்
காதி சோப்பு கரைசல் அரை லிட்டர்


இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.
Read More

October 10, 2010

பேஸ்புக், ட்விட்டரில் அரட்டை அடிப்பவர்கள் வீட்டிற்கு போய்விடலாம் - பிரிட்டன் அரசு நிறுவனங்கள் எச்சரிக்கை
by admin - 0

பணி நேரங்களில் பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பவர்கள் மேல் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர் என்ற சுற்றறிக்கை 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் உட்பட பிரித்தானிய அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த வருடம் போலீசார் எட்டு பேர் காவல்துறை அலுவலகத்தில் இருந்த கணினிகளை பயன்படுத்தி பணி நேரங்களில் தங்கள் பேஸ்புக், ட்விட்டர் நண்பர்களுடன் அரட்டை அடித்து வந்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர தடை விதிக்கப்பட்ட பின்னர் தற்போதும் அரசு மற்றும் நகராட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பலர் சில மென்பொருட்களின் உதவியால் மறைமுகமாக சமூக வலைதளங்களில் தாங்கள் அரட்டை அடிப்பது பிறருக்குத் தெரியாத வண்ணம் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே அரசு செலவீனக் குறைப்புக்களை அமல்படுத்தும் போது பலருக்கு வேலை இழப்புக்கள் ஏற்படலாம் என்ற நிலை உள்ள போது இது போன்று செயல்படும் பணியாளர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பப்படுவது உறுதி என அரசுப் பணியாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Read More

October 09, 2010

மண்பானை செடித்தைலம்
by admin - 0

"மண்பானை செடித் தைலம்' செடிகள் வளர்ச்சிக்கு தேவையான சத்தினை தருவதுடன் பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது.

இந்த தைலத்தை தயாரிக்க தேவையானவை: வேம்பு, எருக்கு, நொச்சி ஆகியவை சுமார் 50 கிராம் பொடி செய்த பயறுவகைகள் (ஏதேனும் ஒரு பயறு), 1 லிட்டர் தயிர் அல்லது அடர்த்தியான மோர், 1.5 லிட்டர் தண்ணீர் ஆகியவையாகும். முதலில் இலைகளை நன்கு அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். அதை அரைத்து வைத்துள்ள பயிர் பொடியுடன் கலக்கவும். பின் தயிர் மற்றும் தண்ணீருடன் இவ்விழுதை நன்கு கலக்கவும். இதை ஒரு மண் பானையில் வைத்து, அதன் வாயை ஒரு துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும். பின், ஒவ்வொரு நாளும் இதை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கலக்க வேண்டும். இவ்வாறு 15-20 நாட்களுக்கு பிறகு, இந்த தைலத்தினை பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு இந்த தைலத்தினை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைகளின் மீது தெளிக்க வேண்டும். இதனை தெளிக்கும் நேரம் மிக முக்கியமானது. அதிகாலை நேரத்திலும், அந்தி சாயும் மாலையிலும் இதை தெளிக்க சிறந்ததாகும். இதை தெளிப்பதன் மூலம் பல பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு, செடிக்கு நல்ல ஊட்டச்சத்து தருவதுடன் பயிர் வளர்ச்சியையும் அளிக்கிறது
Read More

October 08, 2010

அக்னி அஸ்திரம்
by admin - 0

கோமியம் 20 கிலோ
புகையிலை 1 கிலோ
பச்சை மிளகாய் 2 கிலோ
வெள்ளைப்பூண்டு 1 கிலோ
வேப்பிலை 5 கிலோ

இவை அனைத்தையும் மண் பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்டுத்த கூடாது, வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலிமிழக்கக்கூடும்.)

வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக 5 முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி வைத்து மண்பானையின் வாயில் துணியை வேடுகட்டி 2 நாட்கள் அப்படியே வைத்து விடவேண்டும். நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும்.

அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.

100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம் 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு பூச்சிகள் காணாமல் போய்விடும்.
Read More

October 06, 2010

இயற்கை பூச்சி விரட்டி
by admin - 1


உழவுத் தொழிலில் ஒரு சில பூச்சிகள் பயிர்களை அழித்து விடுகின்றது. இதனால் செயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தபடுகிறது இதனால் நாம் உண்ணும் உணவும் மெல்ல நஞ்சாகி விட்டது மற்றும் இயற்கை வளம் முழுமையாக அழிக்கபட்டு வருகிறது.
ஆனால் இயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறையில் இயற்கை பூச்சி விரட்டி கையாளப்படுகிறது. இதனால் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக உள்ளது மற்றும் இயற்கை வளம் முழுமையாக பாதுகாத்து வரப்படுகிறது.
இயற்கை/மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள் இவை:
பீஜாமிர்தம்
அக்னி அஸ்திரம்
பிரம்மாஸ்திரம்
மண்பானை செடித்தைலம்
அரப்பு மோர் கரைசல்
வேம்பு புங்கன் கரைசல்
நீம் அஸ்திரா
சுக்கு அஸ்திரா
சோற்றுக்கற்றாழை இயற்கை பூச்சிவிரட்டி
வேப்பங்கொட்டை இயற்கை பூச்சிவிரட்டி
மஞ்சள் கரைசல்
இஞ்சி கரைசல்
இஞ்சி,பூண்டு ,மிளகாய் கரைசல்
துளசி இலை கரைசல்
பப்பாளி இலை கரைசல்
வசம்பு பூச்சிவிரட்டி
பொன்னீம் பூச்சிவிரட்டி
ஒட்டு திரவம்
Read More

நோபல் பரிசு!
by admin - 0

நோபல் பரிசை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் 1901-ல் நிறுவினார். இவர் ‘டைனமைட்’ என்ற வெடிபொருளைக் கண்டுபிடித்தவர்.

அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

முதல் நோபல் பரிசு பெற்றவர்களில் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஹென்றி டுனன்டும் (அமைதி), X-Ray - யைக் கண்டுபிடித்த ராண்ட்ஜனும் (இயற்பியல்) அடங்குவர்.

மேரி க்யூரி இயற்பியல், வேதியியல் துறைகளில் இருமுறை நோபல் பெற்றுள்ளார். அமைதிக்காகவும் வேதியியலுக்காகவும் இரு முறை நோபல் பெற்றவர் லினஸ் பாலிங். இயற்பியலில் மட்டுமே இரு முறை நோபல் பெற்றவர் ஜான் பார்டீன்.

நோபல் பரிசு, ஆண்டு தோறும் ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வழங்கப்படுகிறது.

பொருளாதாரத்துறையில் பெண்கள் யாருமே நோபல் பரிசு பெற்றதில்லை.

இதுவரை 6 இந்தியர்கள் நோபல் பெற்றுள்ளனர். நோபல் பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர், (1913-ல் இலக்கியத்திற்காக). இயற்பியலுக்காக சி.வி.ராமனும், விண்வெளி இயற்பியலுக்காக அவர் மருமகன் சுப்ரமணியன் சந்திரசேகரும் நோபல் பெற்றனர். ஜீன்-ஐ செயற்கை முறையில் தயாரித்ததற்காக, ஹர்கோவிந்த் குரானா நோபல் பரிசு பெற்றார். அமைதிக்கான நோபல் பரிசை முதல் முதலாக 1979-ல் அன்னை தெரசா இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார். பொருளாதாரத் துக்காக நோபல் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை 1998-ல் அமர்தியா சென்னுக்கு கிடைத்தது.

நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க காரணமாக இருந்த டி குபெர்டினுக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டது.

கணிதமேதை பெட்ரண்ட் ரஸ்ஸல் 1950-ல் இலக்கியத்திற்கான நோபல் பெற்றார்.

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், 1959-ல் இலக்கியத்திற்கான நோபல் பெற்றார்.

போரிஸ் பாஸ்டர்நாக் இலக்கியத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசைப் பெற மறுத்துவிட்டார்.
Read More

October 03, 2010

குடிவரத்து கட்டுப்பாடுகள் பிரித்தானியாவை சிதைத்து விடும் - தொழிற்துறையினர்
by admin - 0

பிரிட்டன் மக்களின் நலன்களுக்காக குடிவரத்துக்களில் அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால் பிரிட்டன் தொழிற்துறைக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது என பிரிட்டன் தொழில் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளதோடு உடனடியாக இந்த விதிமுறைகளை தளர்த்திக் கொள்ளாவிட்டால் பல தொழில்கள் பிரித்தானியாவை விட்டுப் போய் விடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் தொழில் ரீதியான போட்டியையோ , சவாலகளையோ சந்திக்க விரும்பினால் அதற்குத் தகுந்த திறமை உடையவர்களை பணியில் அமர்த்துவது அவசியம் என்பதையும் இந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

எடுத்துக்காட்டாக சட்ட ரீதியான நிறுவனங்களின் திறமையான செயல்பாட்டிற்கு அமெரிக்கா, மற்றும் ஜப்பான் நாட்டினரின் உதவி பெரிதும் தேவைப்படுகிறது என்பதையும் கூறியுள்ளது.

இதில் அரசு தடைகளை ஏற்படுத்தினால் பிரிட்டனில் சேவை சார்ந்த தொழில்கள் எதையும் செய்ய இயலாத நிலையே உருவாகும் என்பதையும் தொழிற்துறையினர் வலியுறுத்தி வருவதால் அரசு இதில் கவனம் செலுத்தி தொழில்நுட்பத் துறையினரின் மீது விதிக்கப்பட்டுள்ள குடிவரத்து கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமென தொழில் மற்றும் வர்த்தக துறைக்கான அமைச்சர் மார்க் பிரிஸ்க் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read More