Latest News

September 23, 2017

பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன் தமிழர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்.
by admin - 0

பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன் தமிழர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்.




ஐக்கிய இராச்சிய பிரதமர் இல்லத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் குஜியந்தன், நிமல், அஷந்தன் தியாகராஜா, குகரூபன், பிரசாத், விஜியதீபன், கேசவன் ஆகியோர் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றனர்.

நிகழ்வானது தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பமானது.








 இந் நிகழ்வு தொடர்பாக உணவு தவிர்ப்புப் போராட்த்தில் ஈடுபட்டுவரும் அஷந்தன் தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில் 

விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் தொடர்ந்து இலங்கை அரசு அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வரை இலங்கையுடனான வர்த்தக தொடர்புகளை இங்கிலாந்து உட்பட ஏனைய கொமன் வெல்த் நாடுகள் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

ஆகிய இரு அம்சக் கோரிக்கையை முன் வைத்து இவ் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி இன்னமும் எட்டப்படாத நிலையில் பேரினவாத சிங்கள அரசு தமிழ் மக்களின் அரசியல் முன்னகர்வுகளை அடக்கும் முகமாக அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது மிலேச்சத்தனமான ஒர் செயலாகும்.

யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் ஆனபோதும் நல்லாட்சி அரசு என தம்மை பறை சாற்றிக் கொண்டு கொடுங்கோளாட்சி புரிகின்றனர்.

இலங்கை அரசு இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காதவிடத்து தமது போராட்டங்கள் தொடரும் எனவும், தாம் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட தயங்கமாடோம் 

எனவும் தாம் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தின் மூலம் இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுவதாகவும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments