Latest News

January 27, 2017

கல்வி அமைச்சரின் விசேட ஆலோசனையின் படி ஆசிரியர் சேவையில் பலவித மாற்றங்கள்!
by admin - 0

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களின் விசேட ஆலோசனைப் படி இலங்கை ஆசிரியர் சேவையில் 2017 ஆம் ஆண்டு முடிய முன்னர் சகல வெற்றிடங்களும் நிரப்பப்பட்டு கல்வித்துறையில் பாரிய பயன் தரு மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

2017 ஆம் ஆண்டு முடிவதற்குள் இலங்கை ஆசிரியரியர் சேவையிலுள்ள சகல வெற்றிடங்களையும் நிரப்புவதால் இலங்கைக் கல்வித்துறை மிகவும் சிறந்த நிலையை அடையவுள்ளதாகக் கூறி மகிழ்ச்சி தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 1,093 பட்டதாரி ஆசிரியர்களை சேவையில் சேர்க்க வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகி உள்ளது.
மற்றும் 1,177 பட்டதாரி பயிலுநர்களை ஆரம்பக்கல்வி ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றவர்களை வெற்றிடங்கள் அடிப்படையில் நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மூலம் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான  ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 3,482 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை சேவையில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஆலோசகர்களுக்காக புதிய சேவையொன்று ஸ்தாபிக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
மாகாண பாடசாலைகளில் க .பொ.த. உயர்தரம், டிப்ளோமா சித்தியடைந்தவர்களை நியமிக்க மாகாணங்களில் உள்ள வெற்றிடங்கள் அறியப்படவுள்ளன.
கல்வி அமைச்சரின் விசேட ஆலோசனையின் படியான மேற்படி திட்டங்களால் எதிர் வரும் காலங்களில் இலங்கையின் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments